பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இறைவன், பட்டாரர்' எனப் பெற்ருர். இந்நாளில் அக் கோயில் வாணுதிசுவரர் கோயில் எனப் பெறுகிறது.

சிதம்பரத்தில்

கோப்பெருஞ்சிங்கனது 10 ஆவது ஆட்சியாண்டுக் குரிய சிதம்பரக் கல்வெட்டு (8) வாரணவாசி மகாதேவர் கோயில் என்று ஒரு கோயிலைக் குறிப்பிட்டுப் பிடாரியார் கோயில் கட்டுவதற்குச் சோழக் கோர்ைக்கு நிலம் விற்ற செய்தியைக் குறிப்பிடுகிறது.

கோப்பெருஞ்சிங்கனது 10 ஆவது ஆட்சியாண்டுக்குரிய இன்னெரு சிதம்பரக் கல்வெட்டு(9) சோழர்கோன் என்பானின் ஒலை (உத்தரவு) ஆகும். அதில் பிடாரி திருச்சிற்றம்பலமா காளி கோயில் இருக்கும் பகுதியாகிய விக்கிரமசோழநல்லூரில் உள்ள 140. 7/8 குழி நிலத்துக்குப் பதிலாக வாரணவாசி மகாதேவர் கோயில் தானத்தார் பக்கல் 141 குழி நிலத்தைப் பெற்றுக்கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது. இப்பிடாரியார் கோயில், நாயகர் (நடராசப்பெருமான்) திருக்கடலுக்கு எழுந் தருளும் திருவீதியாகிய விக்கிரம சோழன் தெற்குத் திரு விதிக்குத் தெற்கில் அமைந்திருந்தது. பதிலாகப்பெற்ற நிலம் விக்கிரமசோழன் தெற்குத் திருவீதிக்குத் தெற்கிலும், வாரண வாசிமகாதேவர் திருக்குளத்துக்கும் திருநந்தனவனத்துக்கும் திருமடவிளாகத்துக்கும் கிழக்கிலும் இருந்தது.

தொகுப்புரை

இதுகாறும் கூறியவாற்ருல் வாரணவாசி, யென்பது சங்க காலத்திருந்த ஒருர் என்றும், வாரணம்’ என்பது இரண்டாம் குலோத்துங்கனது பாட்டன் பெயர் என்றும், அவர் யோகீசுவரரான காலையில் வாரண வாசித் தேவர், எனப் பெற்ருர் என்றும், அவர் பெயராலும் வாரணவாசி என்றேரூர் அமைக்கப் பெற்றதென்றும், கன்னியாகுமரியும் அதன் சுற்றுப்புறங்களும் இரண்டாம் குலோத்துங்கன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/131&oldid=676666" இலிருந்து மீள்விக்கப்பட்டது