135
‘நிமி முக்கந்நிருவத்துக்கும் உரித்து’ என்பது, (நிமி-நேமி) இவ்வுலகில் காந்தர்வ வித்தையின் முப்பகுதிகளாகிய கீதம் வாத்யம் நிருத்தம் ஆகிய முப்பகுதிகளுக்கும் உரியது என்று பொருள்படும்.
'குணசேனப் பிரமாணம் செய்த வித்யா பரிவாதினி கற்க’ என்பது, குணசேனல்ை கண்டுபிடிக்கப்பட்ட இவ் விசைக்கலை, பரிவாதினி கற்பதற்குப் பயன்படும் என்று பொருள்படும்.
இங்ங்னம் Dr. மீனுட்சியம்மையார் இதற்குப் பொருள் தாரா நிற்பர்.
யாழ்நூல் ஒழிபியலில் விபுலாநந்த அடிகளார், புகில் பருக்கும் நிமி முக்கந் நிருவத்துக்கும் உரித்து’ என்பதை 'ஒற்று நீக்கி நோக்குமிடத்து, புகி.பரு-நிமிமுக-நிருஅது. தெமிமுக’ என்னும் நான்கும் குடுமியாமலேக் கல்வெட்டில் அமைந்த நான்கு அக்கரச்சுவர வரிசைகள் போல்வன: என்று கூறுவர்.
இனி, மாமண்டூர்க் கல்வெட்டிலும் இசையைப் பற்றிய பகுதி மிகவும் சிதைந்துள்ளது. எனினும்,
கந்தர்வ சாஸ்த்ர மத்தவிலாசாதி பதம் பிரஹளுேத்தமம் சத்ருமல் லஸ்ய கல்பாத் ப்ரவிபஜ்ய வ்ருத்தம் தகூழின சித்
வித்யாம்கார மித்வாதா யாதாவிதிஹி ஸ்ச விவிதைஹ் த்ருத்வா வர்ணசதுர்த்தம்
அப்ராத் பூர்வம் நிர்வெண்டும் வாத்யா ஸ்ரவணைஹ
நிருத வா ைதவ
என்ற பகுதிகள் படிக்கவியலுமாறு உள்ளன.