137
த தை தா தை த தை தா தே தா தை தா தே தை தே தா தை தா தே தா தை த தை தா தை த
இரண்டாவது கல்வெட்டில் இரண்டாம் வரியும் ஐந்தாம் வரியும் சிதைந்து காணப்படுகிறது.
இவ்விரு கல்வெட்டுக்களையும் இடமிருந்து வலமும், மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும் படித்தாலும் ஒரே மாதிரியிருத்தலைக் காணலாம்.
மூன்ரும் கல்வெட்டைத் திரு. தி. நா. இராமச்சந்திரன் அவர்கள், எழுத்தும் புணர்த்தான் மணிய வண்ணக்கன் தேவன் சாத்தன்' என்று படித்து, 'வண்ணங்கள் பாட வல்ல ஆதன் சாத்தன் என்பான் இவற்றை இயற்றினன்’’ என்று பொருள் கொண்டார்.
பேராசியர் மகாலிங்கம் அவர்கள் மூன்றம் கல் வேட்டை :சித்தம் தித்தம் பூணதத்தான் மறைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்” என்று படித்துத் தவம் பூண் தேவன் சாத்தன் இதை அளித்தான்’ என்று பொருள் கொண்டார். இவர் கருத்துப்படி மற்ற இரண்டு கல்வெட்டுக்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.
திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் 'ஏழு தானம் பண்ணுவித்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன்” என்று படித்து மணிகளைச் சோதிக்கும் தேவன் சாத்தன் என்று படித்து மற்ற இரு கல்வெட்டுக்களும் யந்திரம் போன்றவை என்று கூறினர்.
மத்தியக் கல்வெட்டாராய்ச்சியாளர் இதை, “எழுத்துப் புணருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன்'