பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

நாயகபட்டன், கோயில் கணக்குத் திருவொற்றியூருடையான் உறவாக்கினன் ஆகியோர் வந்திருந்தனர். இறைவன் திரு முன் ஆளுடைய நம்பி ரீ புராணம் படிக்கப்பெற்றது; எல்லோ ரும் புராணத்தைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பெற்றது.

திருவொற்றியூர்ப் பெருமானுக்குரிய தேவதானங்களில் வடுகப்பெரும்பாக்கம் என்பது ஒன்று. காணியாளர் இன்றி நெடுங்காலம் அவ்வூர் நிலங்கள் பயிரிடப்பெருதிருந்தன. இக்கோயிலுக்குரிய ஊர்களில் இரனேயூர் என்பது ஒன்று. அவ்வூரில் அமுதங் கிழவன் பெரியான் சோமன் என்று ஒருவன் இருந்தான். அவனுக்கு இவ்வடுகப்பெரும்பாக்கத்துக் காணியுரிமையைக் கொடுக்க என்று அரசன் உத்தரவிட் டான். அங்ங்னமே அன்ருடு நற்காசு நூற்றிருபதும் யூரீ பண்டாரத்தில் சோமன் சேர்ப்பித்தான்; இனி நீ பண்டா ரம் இறை யிறுக்க வேண்டும்; அமுதங் கிழவன் சோமனும் அவன் வம்சத்தாரும் விற்ருெற்றி பிந்திக்கிரயத்துக்குரித்தாவ தாக இந்நிலம் விற்றுக் கொடுக்கப்பெற்றது.

பொது

இக்கல்லெழுத்து 1896-ம் யாண்டில் 403-ம் எண் கொண்ட கல்வெட்டாகவும், 1911-ம் யாண்டில் 371-ம் எண் கொண்ட கல்வெட்டாகவும் படியெடுக்கப்பெற்றது. இதனைக் குறித்து, 1912-ம் ஆண்டில் வெளியிட்ட கல்வெட்டுத்துறை அறிக்கையில் பக்கம் 67, 68ல் எழுதப்பெற்றுள்ளது. பேரா சிரியர் திரு. K. A. நீலகண்ட சாஸ்திரி அவர்களின் சோழர் வரலாறு பாகம் II-லும். Dr. இராசமாணிக்களுருடைய பெரியபுராண ஆராய்ச்சி’ என்ற நூலில் பக்கம் 30-31லும், திருப்பனந்தாள் நீலயூரீ காசிவாசி சாமிநாத சுவாமிகள் அவர்கள், அண்மைலைப் பல்கலைக்கழகத்தில் நிறுவியுள்ள நூல் வெளியீட்டு நிதிப் பதிப்பாகச் சித்தாந்த கலாநிதி: திரு. ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளே அவர்கள் பதிப்பித்த ஞான மிர்தம்’ என்ற நூலின் முற்பகுதியில் ஆராய்ச்சியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/149&oldid=676684" இலிருந்து மீள்விக்கப்பட்டது