பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

இங்ங்னம் சதுரானன பண்டிதர் என்ற பெயர் தாங்க. மடபதிகள் பலர் திருவொற்றியூரில் இருந்து, கோயில் கா யங்களை மேற்பார்வை செய்து, அரசர்களால் மதிக்கப்பெற்றுச் சிறந்து விளங்கினர் என்று அறியப்பெறுகின்றது. இவர்கள் தலைமை பூண்டிருந்த மடமும் சதுரானன பண்டிதர் மடம் என்றே வழங்கப்பெற்றது. 17

இனி இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் மட்முடை யவர் ஆக இருந்தவரும் சதுரானன பண்டிதன் என்றே அழைக்கப்பட்டார். இச்சதுரானன பண்டிதரும் அரசரால் நன்கு மதிக்கப்பெற்றவர்; கோயில் காரியங்களே மேற்பார்வை செய்தவர்; இரண்டாம் இராசாதிராசன் மகிழடி சேவையைத் தரிசித்த காலத்தில் உடன் இருந்தவர்; இக்கல்லெழுத்தில் முதலில் கையெழுத்து இட்டவர் ஆகவும் இவர் காணப்பெறு கிறார்.

வாகீசுவர பண்டிதர்

கிருவொற்றியூரில் மேற்குறித்த மகிழடி சேவைக்காலத் தில் அரசைேடு உடன் இருந்தவர்களில் நான்காமவராகக் குறிக்கப்பெற்றவர், சோம சித்தாந்தம் வக்கானிக்கும் வாகீசு வர பண்டிதர் எனப் பெற்ருர் இவ்வாசி சுவர பண்டிதர் கோடலம் பாகை என்னும் ஊரினர்; கோடலம் பாகையி லிருந்தவரும் அருண்மொழி தேவர் என்னும் பெயரின ரும் ஆய பரமானந்த முனிவர் என்பாரிடம் சிவஞாளுேப தேசம் பெற்று சிவஞானம் நிறைந்து விளங்கினவர்; பின்னர்த்

17 ஞாளுமிருதம் : பக்கம் XXXIV.

18, 19 ஞானமிர்தம் 28, வரி 26-30; பாடல் சான்ற பல் புகழ் நிறீஇ வாடாத்துப்பின் கோடலாதி, அருளா பரணன் அறத்தின் வேலி, பொருண்மொழி யோகம் கிரியையிற் புணர்த்த அருண்மொழி திருமொழி போலவும்’ என்ற நூற் பகுதியும், 'க்ோடல் என்றது கோடலம் பாகை என்னும் ஊர்; அருண்மொழி என்பது ரீ பரமானந்த முனிகள்ன் பிள்ளைத் திருநாமம்’ என்ற உரைப் பகுதியும் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/154&oldid=676689" இலிருந்து மீள்விக்கப்பட்டது