148
திருவொற்றியூர்க்குச் சென்று சோமசம்பு சிவாசாரியார் முதலி யோர் வகுத்த பத்ததிகளேயும் பிறவற்றையும் மக்களுக்கு அறிவுறுத்துவாராயினர்20; இதனுல் சோமசித்தாந்தம் வக்காணிக்கும் வாகீசுவர பண்டிதர்' எனப்பெற்றர். இவர் அரசரும் அறிவரும் மதிக்கும் பெற்றியராய் விளங்கினர் என்பது ஒருதலே.
இவ்வாகீசுவர பண்டிதர் திருவொற்றியூரில் தனியாக ஒருமடத்தை நிறுவி அங்கிருந்து சிவத்தொண்டு புரிந்தார் என்று தோன்றுகிறது. சகம் 1260-61ல் (கி. பி. 1339.40ல்) அரசனுன சகலலோக சக்கரவர்த்தி ராஜநாராயணச் சம்பு வராயருடைய 5-ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்து கீழை மடத்து முதலியார் என்று ஒருவரைக் குறிக்கிறது; இவனது 12ஆவது ஆட்சிஆண்டுக்கல்வெட்டு கீழைமடத்து முதலியார் வாகீசுவரதேவர் 2 2 என்று பெயர் கூறுகிறது. இது சோமசித்தாந்தம் வக்காணிக்கும் வாகீசுவர பண்டிதர் குறிக்கப்பெற்ற கல்லெழுத்துக்கு 15 நூற்ருண்டுக்குப் பிற் பட்டது எனினும் வாகீசுவர பண்டிதர் தங்கியிருந்து தொண்டுசெய்த மடம் கீழைமடம்” என்று பெயர் பெற்ற தாயிருக்கும் என்று நினைக்க இடம் தருகிறது. அன்றியும் கீழைமடத்து முதலியார் வாகீசுர தேவர் இறந்து பட்ட காலத்தில் தனக்குப்பிறகு அம்மடத்துத் தலைமை பூண்பவர் அழகிய திருச்சிற்றம்பல முடையார் என்றும் கூறப்பெற்று உள்ளது. எனவே திருவொற்றியூரில் ஒரு மடத்தில் (அதாவது கீழை மடத்தில்) தங்கிச் சிவத்தொண்டு புரிந்தவர் வாகீச பண்டிதர் என்னலாம்; அவர் சிவாகமக் கருத்துக்களே த் தமிழில் யாவருக்கும் விளங்கும் வண்ணம் ஞானுமிர்தம் 2:
20 ஞானுமிர்தம் - திரு. ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை L13535ih XXXIV.
21 212 of 1912; S. H. T. I 525
22 207 of 1912; S. I. T. I 508
23 இது செம்மையான 75 அகவற்பாக்களே யுடையது; சங்கத்தமிழ் நடையில் எழுதப்பெற்றது; சிவஞானசுவாமி