பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

ஞாயிறு என்ற ஊரில் ஞாயிறுகிழாரின் திருமகளாக அவதரித் திருந்தார்; சங்கிலியார் என்று திருநாமம் பெற்ருர்; சங்கிலியா ருக்குத் திருமணப் பருவம் வந்தது; யாரையும் மனக்க விரும் பாமல் திருவொற்றியூரில் கன்னிமாடம் அமைப்பித்து அங்கே தங்கித் திருவொற்றியூர்ப் பெருமாற்குத் திருத்தொண்டுகள் புரிந்திருந்தார். திருவொற்றியூரை அடைந்த சுந்தரர் பூமண் டபத்தினுள்ளே சங்கிலியாரைக் கண்டு அவரைக் குறித்து வினவிஞர் செய்தி அறிந்து சங்கிலியாரைத் தந்தருளுமாறு இறைவனே வேண்டினர். இறைவனும் சங்கிலியை உனக்குக் கொடுக்கின்ருேம்; கவலையை ஒழி என்றருளினர். பின்னர்ச் சிவபெருமான் சங்கிலியார் கனவில் தோன்றி, நம்பியாரூரன் உன்னே மணஞ்செய்ய விரும்பி என்னே வேண்டினுன்’ என்று அருளி, உன்னைப் பிரியாதவாறு சபதம்செய்து கொடுப்பான்? என்றும் கூறினர்; பின்னர்ச் சுந்தரரிடம் எழுந்தருளிச் சங்கிலி யிடம் உன்ஜினப் பிரியேன்” என்று சபதம் செய்து கொடுத்தல் வேண்டும் என்ருர். சுந்தரர் பெருமானநோக்கி, ‘இறைவனே! சபதம் செய்து கொடுக்கச் சந்நிதிக்கு வரும்பொழுது தாங்கள் திருமகிழின்கீழ் எழுந்தருளல் வேண்டும்’ என்று வேண்டினர். சிவபெருமான் இசைந்தருளினர்; சங்கிலியாரிடம் சென்ருர்; சங்கிலியே! நம்பியாரூரர் சபதம் செய்துகொடுக்கச் சந்நிதிக்கு வரும்பொழுது மகிழின்கீழ்ச் சபதம் செய்து கொடுத்தால் போதுமானது; சன்னிதியில் வேண்டாம் என்று கூறுவாயாக’ என்றுகூறி மறைந்தருளினர். மறுநாள் சுந்தரர் சபதம் செய்து கொடுக்கச் சன்னிதிக்கு வந்தார்; சங்கிலியார், இறைவன் திருமுன் சபதம் செய்து கொடுத்தல் தகாது; மகிழின் கீழ்ச் சபதம் செய்தால் போதும் என்றர். நம்பியாரூரர் திகைத் தார்; அங்ங்னமே திருமகிழின்கீழ்ச் சபதம் செய்து கொடுத் தார். மறுநாள் திருவொற்றியூர்த் திருத்தொண்டர்கள் நம்பி யாருரருக்கும் சங்கிலியாருக்கும் திருமணம் செய்வித்தார்கள்.

இச்சுந்தரர் வரலாற்றை நினைவுகூர்ந்து, திருவொற்றியூர்ப் பெருமானத் திருமகிழின்கீழ் எழுந்தருளுவித்து விழாக் கொண்டாடுவது மகிழடி சேவை” எனப்பெறும். மகிழடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/159&oldid=676694" இலிருந்து மீள்விக்கப்பட்டது