இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
156
வடமொழிப்பகுதி
இக் கல்லெழுத்தின் முதற்கண் காணும் வடமொழிப் பகுதியுள் சில எழுத்துக்கள் சிதைந்துவிட்டன. கானும் பகுதியின் பொழிப்புரை பின்வருமாறு:
விற்கப்பட்டது நூற்றிருபது பொன் காசுகளினால் விருஷலனாகிய சோமன் என்னும் பெயருடையவனுக்கு வடுகப் பெரு(ம்பாக்கம்) விருஷலர் என்பது பெருங்குடிமக்களுக்கும் இழிந்தவர்களுக்கும் பிறந்தவர் எ ன் ப து பொருள்படும்; தமிழ்ப்பகுதியில் பெரியான்சோமன் எனப் பெற்றிருத்தலின் ‘விருஷலஸ்ய’ என்பதற்குப் பெருமை பொருந்திய’ என்று பொருள் கூறுதல் பொருந்தும்.
முடிப்புரை
திருமகிழடிசேவைத் திருவிழாக் காலத்தில் ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம் (அதாவது பெரியபுராணப்பகுதி) வாசித்து விளக்கப்பெற்றது என்று அறிகிறோம். அப் பண்டைப் பழக்கம் இந்நாளிலும் நிகழின் சாலவும் பொருந்தும். இறைவன் திருவருள் புரிவாராக!