கூறினர் ஏகம்பத்துக்கும் மேற்கில் அமைந்ததே கைலாசநாதர் கோயில், சம்பந்தர் காலத்துக்குப் பிறகே கைலாசநாதர் கோயில் இராஜசிம்மனால் கட்டப்பெற்றது. அது இப்பொழுது வயல்வெளிகளின் இடையில் இருப்பினும், அந் நாளில் மாடமாளிகைகளால் குழப்பெற்றிருந்தது. தண்டி, ராசசிம்மன் காலத்தவர். தமிழ்த் தண்டியும் கைலாசநாதர் கோயில் அறிந்தவரென்பது சொல்லாமே அமையும், ஆகவே கைலாசநாதர் கோயில் மேற்கெல்லையாகக் கூறுதலேயே அவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஏகம்பம் சூழ்ந்ததும் அழியத்தக்கதுமான சோலையை மேற்கெல்லையாகக் கூறினர் எனலும் பொருத்தமில் கூற்றாம், கைலாசநாதர் கோயிலக் கூறுவதினும் ஆங்கிருந்த கடிகையைக் கூறுவதற்கும் ஓர் இயைபு உண்டு. மயிலுக்குப் பீலி பெருமையும் பொலிவும் தந்ததுபோலக் காஞ்சிக்குக் கடிகை சிறப்பும் அழகும் அளித்தது. ஆகவே இப்பாடலில் கண்ட கடிகா என்பது காஞ்சிக் கடிகை என்றும், அது காஞ்சிபுரத்து மேற்கெல்லேயில் இருந்தது என்றும் கருதலாம்.