3. கல்லெழுத்துக்களில் கங்காபுரியினர்
கங்கைகொண்ட சோழன்
சோழப் பேரரசர்களில் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் முதலாம் இராசேந்திரன் ஆவன். இவன் கி. பி. 1012 முதல் 1044 வரை ஆட்சி புரிந்தவன்; கங்கைவரை படையெடுத்துச் சென்று வாகை சூடியமையின் “கங்கைகொண்ட சோழன்’ எனச் சிறப்புப் பெயர் எய்தினான்; ‘அலைகடல் நடுவண் பலகலஞ் செலுத்திக்” கடாரத்தை வென்றமையின் 'கடாரங்கொண்ட சோழன்’ எனப்பெற்றான்.
கங்கை கொண்ட சோழன்
இராசேந்திரன் I தான் கொண்ட கங்கை வெற்றியின் சின்னமாகக் ‘கங்கை கொண்ட சோழபுரம்’ என்னும் நகரமும், ‘கங்கைகொண்ட சோழேச்சரம்' என்னும் திருக்கோயிலும் நிர்மாணித்தான். அந்நகரம் அந்நாளில் மிகப்பெரியதாக அமைந்திருத்தல் வேண்டும். அந்நகரம் இருந்ததற்கு அறிகுறியாகக் கங்கைகொண்ட சோழபுரம் என்னும் பெயருடன் ஒரு சிற்றுாரும், கங்கை கொண்ட சோழேச்சரம் என்னும் திருக்கோயிலும் காட்சியளிக்கின்றன. பண்டிருந்த பெருநிலையை அறிவிக்கும் முறையில் இந்நாளைய கங்கைகொண்ட சோழ புரத்தைச் சுற்றிலும் சில ஊர்கள் உள்ளன. சுண்ணாம்புக்குழி என்பதொன்று; இது கோயில் கட்டச் சுண்ணும்பு தயாரித்த இடம் ஆகலாம். கணக்கு விநாயகர் கோயில்; இது கோயி லுக்கு அரை கி.மீ. தொலைவில் ஒடைக்கு அப்பால் உள்ளது. மண்மலை, மெய்க்காவல்புத்துார், குயவன் பேட்டை, உட்கோட்டை முதலியன அந்நகரப் பகுதிகளாம். உட்கோட்டை என்பது அரண்மனைகள் இருந்த பகுதி ஆகும். ஆயிரக்கலவன் என்ற ஊரும் இருக்கிறது. அஃது ஆயுதக்களம் என்பதன்