ஆழ்வார் கோயிலில், கங்கைகொண்ட சோழபுரத்தில் “வீர சோழ மடிகை” என்ற பகுதியில் இருந்த ஒரு வியாபாரி, ராசேந்திர சோழன் மாடை 400 கழஞ்சு பெர்ன் அளித்தான் இஃது 800 காசுக்குச் சமம். இப் பொன்னைகொண்டு தலைச்சங்காடு ஊர் அவையினர், அக்கோயில் நிலங்கள் சிலவற்றுக்கு இறை நீக்கினர். (400 கழஞ்சுக்கு ஆண்டொன்றுக்கு வட்டி 150 கழஞ்சு). அங்ஙனம் முதலாம் இராசேந்திரனின் கல்வெட்டொன்றால் (253 of 1925) அறியலாம். திருவெறும் பூரில்
தேவார காலத்தில் இத்தலம் திருவெறும்பூர் எனப்பெற்றது. திருநாவுக்கரசர் இத்தலத்தைப் பாடியுள்ளார். இது திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ளது. இங்கு இரண்டாம் இராசேந்திரனின் 5-ஆம் ஆட்சி யாண்டுக்குரிய கல்லெழுத்து உள்ளது (121 of 1914). கங்கைகொண்ட சோழபுரத்து உய்யக்கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளத்துப் பெண்டாட்டி ஒருத்தி திருவெறும் பூர்க்கோயிலில் ஒரு விளக்குத் தண்டு வாங்கப் பணம் அளித்தனள்.
திருவாரூர்
இது ஏழுவிடங்கத் தலங்களுள் முதன்மையான தலம்; வீதி விடங்கத்தியாகர் என்பது தியாகேசப்பெருமான் திருப்பெயர் ஆகும். உடையார் வீதிவிடங்க தேவர் நம்பிராட்டியார்க்கு ஒரு இரத்தின ஆரத்தைக் கங்கை கொண்ட சோழபுரத்தான் ஒருவன் அளித்ததாக இரண்டாம் இராசேந்திர சோழனின் எட்டாம் ஆட்சி யாண்டுக்குரிய கல்லெழுத்தில் உள்ளது (676 of 1919).
திருக்காளத்தியில்
திருக்காளத்தி, மூவர் பாடலும் பெற்ற தலங்களுள் ஒன்று. இத்தலத்தில் விளக்கு வைப்பதற்காக 96 பசுக்களை ஒருவன்