பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19



அளித்தான். அவனுக்குத் ‘தெங்கங்குடையான் கூத்த வடுகன்’ என்று பேர். அவன் கங்கைகொண்ட சோழபுரத்தில் “மலையரணப் படைவீடு” என்ற பகுதியில் ஒரு சிறு தன அலுவலன். இச்செய்தி, ஆட்சியாண்டு குறிக்கப் பெருத திருக்காளத்திக் கல்வெட்டொன் ருல் (130 of 1922) அறியப் பெறும்.

திருவாவடுதுறையில்

இதுவும் மூவர் பாடலும் பெற்ற சோழ நாட்டுத் தலங்களுள் ஒன்று. திருவாவடுதுறைச் சபையினர் விக்கிரம சோழனுடைய மூன்றாவது ஆட்சியாண்டில் இரண்டு வேலி நிலத்தை இறையிலியாக்குதற் பொருட்டு 100 காசு பெற்றார்கள். இந்நிலம் விக்கிரம சோழனுடைய மாதேவிகளில் ஒருவராகிய முக்கோக்கிழானடிகளின் பணிப் பெண்ணால் கொடுக்கப் பெற்றது. அப் பணிப்பெண்ணின் பெயர் ‘பவழக் குன்று பெரியாள்’ என்பதாகும். இந்நிலம் குலோத்துங்க சோழநல்லூரில் மங்களேசுவரமுடைய மகாதேவர்க்கு அளிக்கப் பெற்றது. இக் குலோத்துங்கசோழநல்லூர், கங்கை கொண்ட சோழபுரத்துக் கைக்கோளர்க்குரிய ‘வீரபோகம்’ ஆகும். இங்ங்னம் திருவாவடுதுறைக் கல்வெட்டொன்று இயம்புகிறது (69 of 1926).

திருவாவடுதுறையில் 'பெருந்திருவாட்டி’ என்ற ஒரு அறச்சாலை முன்னாளில் இருந்தது. இதற்கு “அறச்சாலைப் புறம்” ஆக 13 வேலி நிலம் ஒதுக்கப்பெற்றது. உய்யக் கொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்தார் 716 அன்றாடு பழங்காசு பெற்று அந்நிலத்தை இறையிலியாக்கினர். இவ் வறச்சாலை கங்கைகொண்ட சோழன் திருக்கொற்ற வாசலில் புறவாயில் சேனாபதி ‘இளங்காரி குடையான் சங்கரன் அம்பலம் கோயில் கொண்டான் ஆன அநந்த பாலர்’ என்பவரால் நிறுவப்பெற்றது (71 of 1926).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/26&oldid=981612" இலிருந்து மீள்விக்கப்பட்டது