பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


யுண்டதற்கு முன்னமேயே காணாமற் போயிருத்தல் கூடும், இரண்டாவது செப்பேட்டின் இரண்டாவது பக்கமும் மூன்றாவது செப்பேட்டின் முதற்பக்கமும் சிதைந்துள்ளனவாகும். இங்ஙனம் இச்செப்பேடுகள் திரு. M. Jules Delafon என்பவரால் 1879-ல் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பாரிஸ் மாநகரில் Bibliotheque Nationalesல் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. (Epigraphia Indica Vol. XVIII, பக்கம் 5.).

ஆய்வாளர்

1905ல் பாரிஸில் வெளியிட்ட கீழைநாட்டு நினைவுகள் (Memoires Orientaux) என்ற சுவடியில் திரு M. J. வின்சன் (M. Julien Vinson) என்பார் எழுதிய 9-ம் நூற்றாண்டுக்குரிய பாகூர்க்கல்லூரி (Le College de Bahour au IXe siecle) என்ற கட்டுரையில் பக்கம் 211-263ல் பாகூர்ச்செப்பேடுகள் குறித்து எழுதப் பெற்றுள்ளன. Epigraphia Indica Volume IV-ல் பக்கம் 180-81ல் இச் செப்பேடுகள் குறித்துப் பேராசிரியர் E. உல்ஷ் (Hultzsh) அவர்கள் சில குறிப்புக்கள் தந்துள்ளார். ராவ்பகதூர் H. கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் 1917-ல் S. I. I. Vol. 11ல் பக்கம் 513-17ல் செப்பேட்டுப் பாடம் தந்து ஆராய்ச்சி முன்னுரையும் எழுதியுள்ளார். இச்செப்பேடுகளின் வரலாற்றுச் சிறப்புக்கருதிப் பேராசிரியர் உல்ஷ் அவர்கள் Epigraphia Indica, Volume XVIII-ல் பக்கம் 5-15ல் ஆங்கில எழுத்துருவில் பாடமுப் ஆங்கிலமொழி பெயர்ப்பும் ஆய்வுரையும் 1925ல் சிறப்புற எழுதியுள்ளார். திரு R. கோபாலன் அவர்கள் M.A.. பல்லவர் வரலாறு என்ற நூலில் பக்கம் 140 141, 199, 200 ஆகிய பக்கங்களிலும் Dr. C. மீனாட்சி அவர்கள் M.A., 'பல்லவர்கால ஆட்சியும் வாழ்க்கையும்' (Administration & Social Life under the Pallavas) என்ற நூலில் பக்கம் 205-7லும், Dr. இராசமாணிக்கனார் அவர்கள் M.A., பல்லவர் வரலாறு என்ற நூலில் 255-57 பக்கங்களிலும் பாகூர் பட்டயங்கள்- கல்லூரி குறித்து எழுதியுள்ளனர். ஜோவோதுப் ராய்த்துரை (Jouveau Dubreuil) தம்முடைய பல்லவர் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/50&oldid=1388504" இலிருந்து மீள்விக்கப்பட்டது