49
ஆணத்தி
இதற்கு ஆணத்தி (ஆஜ்ஞப்தி)யாக இருந்தவன் உத்தம சீலன் எனப்பெற்றான் (வரி 41 ). இவன் (ந்ருப) துங்கவர் மனின் மந்திரியாவன் (வரி 42 ); பிரஹ்ஸ்பதி போன்றவன்; விடேல் விடுகு காடுபட்டித் தமிழ்ப் பேரரையன் என்ற சிறப்புப் பெயருடையவன் (See P 17 of மீனாட்சி.)
நிறை வேற்று முறை
முதலில் நாட்டார்க்கு இச்செய்தி திருமுகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. நாட்டார், திருமுகம் கண்டு தொழுது தலைக்குவைத்துப் பதாகைநடந்து கல்லுங் கள்ளியும் நாட்டி, அறையோலை விடுத்தனர்.
ஊர்களோடு கொடுத்தவை
ஊரிருக்கையும் மனையும் மனைப்படப்பும் மன்றும் கன்று மேய் பாழும் குளமும் கொட்டகாரமும் கிடங்கும் கேணியும் காடும் களரும் ஓடையும் உடைப்பும் நீர்பூசி நெடும் பெறிந்து உடும்போடி ஆமை தவழ்ந்த தெல்லாம் உண்ணிலம் ஒழிவின்றித் தரப்பெற்றன.
செப்பேடு எழுதியவர்
இச்செப்பேடுகளை எழுதியவன் நிருபதுங்கன் என்ற பெயருடையவன்; இவன் உதிதோதித குலதிலகன்; தட்டார் குலத்தவன்; பலகலைகளிலும் வல்லவன்; பல்லவ குலத்து வழிவழித் தொண்டு செய்து வந்தவன்; மாதேவிப் பெருந்தட்டான் என்பவனின் மகன்; உதிதோதயப் பெருந்தட்டானின் பேரன்; கச்சிப் பேட்டுக் கீழ்ப்பைசாரம் என்ற ஊரினன்.