பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தந்தி சக்தி விடங்கியார்

முதல் ராசராசன் பட்டத்தரசி

பிற்காலச் சோழ அரசர்களில் அறிவாற்றல்கள் அமைந்து சோழப் பேரரசை வளர்த்த பேரரசர்களில் ஒரு வராகத் திகழ்ந்தவர் முதலிராசராசச் சோழராவர். இவர் இரண்டாம் பராந் தகனுகிய சுந்தர சோழனுக்கு வானவன் மாதேவிபால் பிறந்தவர்; கி. பி. 985-1014 வரை ஆண்ட அருந்திறல் அரசர். இவருக்குப் பல மனேவியர் இருந்த னர். அவர்களுள் பட்டத்தரசியாக விளங்கியவர் உலோக மாதேவியார் ஆவர். இவருக்குத் தந்தி சக்தி விடங்கியார் என்ற வேருெரு பெயருமுண்டு. இவ்வம்மையே இம்மன்னன் வாழ்நாள் முழுமையும் பட்டத்தரசியாக விளங்கினர். இவ்வரசன் சிவலோகம் சேர்ந்த பிறகும் இவ்வம்மையார் சில ஆண்டுகள் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்பது ஒரு கல்லெழுத்தால் அறியக்கிடக்கிறது . . இராசராசன் சிறந்த சைவகை விளங்கியமை யாவரும் அறிந்ததொன்று. இவ் வம்மையாரும் தன் கணவனைப்போல் சிவபக்தி மிக்கவராய்த் திகழ்ந்தவர். திருவையாற்றில் உலோகமாதேவீச்சரம் என் னும் திருக்கோயில் எடுப்பித்தமையும், திருவலஞ்சுழி திருக் கோயிலில் கூேடித்திரபாலதேவரை எழுந்தருளுவித்தமையும் இதனை வலியுறுத்தும்.

1. உலோகமாதேவீச்சரம்

இத்திருக்கோயில் உலோகமாதேவியாரால் எடுப்பிக்கப் பெற்றது; ஆகலின் உலோகமாதேவீச்சரம் எனப்பெற்றது. இது திருவையாற்றில் ஐயாறப்பரது திருக்கோயில் வடக்குப் பிராகாரத்தில் உள்ளது. இக்கோயில் இவ்வம்மையாரால் எடுப்பிக்கப்பெற்றது என்பது பின்வரும் கல்லெழுத்துப்பகுதி யால்2 அறியப்பெறும்:

1. S. I. I. vol. v. No. 515. 2. S. I. I. volv. No. 32.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/58&oldid=676593" இலிருந்து மீள்விக்கப்பட்டது