பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
58



சதயகாள் திருவிழா

ராசராச சோழர் 1 சதய நாளில் பிறந்தவர். இவர் தஞ்சையில் எடுப்பித்த ராச ராசேச்சரத்திலும் (பெரிய கோயிலிலும்), தந்தி சக்தி விடங்கியார் திருவையாற்றில் எடுப்பித்த உலோகமா தேவீச்வரத்திலும் திங்கள்தோறும் சதய நாளில் சிறப்பாக விழா நடைபெறுதற்கு நிபந்தங்கள் விடப்பெற்றிருந்தன .

உலோகமாதேவீச்வரம் . இக்கான் கிலே

திருவையாற்று ஐயாறப்பரது திருக்கோயில் திருச் சுற்றில் இத்திருக்கோயில் உத்தரகைலாயம்’ என்ற பெயரால் இந்நாளில் விளங்குகிறது. திருக்கோயில் உள்ளும் புறமும் மிகத் துய்மையாக உள்ளது. (தருமபுர ஆதீனக் கோயில் களுக்குள்ள தனிச்சிறப்புக்கள் பல; அவற்றுள்ளும் இதுவும் ஒன்று என்பது சைவர்கள் நன்கு அறிவர்). திருக்கோயில் சுற்றிலும் தளவரிசை போடப்பெற்றுள்ளது. திருக்கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பெற்றுள்ளது. முன் மண்ட பச்சுவர்கள் கல்லெழுத்துக்களே மறைக்காது சாந்திடப் பெற்று உள்ளன. திருக்கோயில்சுற்றிலும் கல்லெழுத்துக்கள்உள்ளன சிற்சிலபகுதிகளில் கோயில் பழுதுற்று இருக்கிறது. இறையகத் தெற்குச் சுவரில் இரண்டு புரைகளில் முதற்புரையில் ஆடவல் லார்(நடராசர்) சிற்பம் முழுதும் பின்னமாகி விட்டது. அவ் விடத்தில் ஆடவல்லார் சிற்பம் இருந்திருத்தல் வேண்டும் என்பது ஊகித்துத் தான் அறியலாம். அடுத்த புரையில் உள்ளது, தென் திசைக் கடவுள்; கண் கவர் நிலையில் உள்ளது. வடக்குச்சுவரில் முதற் புரையில் இருந்த சிற்பம் இன்னது என்று தெரியும் நிலையில் இல்லை; மற்ருென்று பிரம்மா, நான்கு தலைகள் கொண்ட சிற்பம்; அழகொழுக இன்னும்காட்சி யளிக்கிறது. இறையகத்து எழுந்தருளியுள்ள

- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ----------------

. பண்டாரத்தார் சோழர் வரலாறு பாகம் பக்கம் 91.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/65&oldid=980733" இலிருந்து மீள்விக்கப்பட்டது