பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
64



சந்திரன் ஒன்றுமாய் அறுமுழமே இருவிரல் சுற்றடைய கன மாகச் செய்த பிரபைஒன்று.”

இவர்க்குக் கொடுத்தன: சப்தசரி 7 விலை காசு நூறு; திரிசரம் 18 காசு 201; பொற்பூ ஒன்று; திருக்குதம்பை ஒன்று; தோடு ஒன்று; திரள்மணி வடம் ஒன்று; திருக்கைக்காறை (இரண்டு); திருப்பட்டிகை ஒன்று; திருவடிக்காறை (இரண்டு) குறுமடல் ஒன்று பொன் 20: கழஞ்சு இரண்டு மஞ்சாடியும் குன்றி; ஒரு கபாலம், வெள்ளி 34 கழஞ்சு மஞ்சாடி குன்றி.

'ஷை பிச்சதேவர்க்குத் திருவமுதுள்ளிட்டு வேண்டும் நிபந்தங்களுக்கு 743 காசு தந்தார்கள். இக்காசு பொலி சைக்கு விடப்பட்டது. காசு ஒன்றுக்கு முக்குறுணி நெல் வீதம் அளக்கப்பெற்ற நெல் 185 கலனே இருதுாணிக்குறுணி. ராஜேந்திர சிங்கவளநாட்டு வீர நாராயணச் சதுர்வேதி மங் கலத்தவர் இங்ங்ணம் தர ஏற்றுக்கொண்டனர். 19

5. தஞ்சைப் பெரியகோயிலில் படிவம்

பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனுன தென்ன வன் மூவேந்த வேளான் என்பவர் இராசராசன் I காலத்தில் தஞ்சைப் பெரிய கோயிலில் ரீ காரியம் ஆராய்பவராக இருந் தார். 20 இவர் சிவனடியார்களிடத்திலும், அரசனிடத்தும் அன்பு பூண்டொழுகியவர். இவர் தஞ்சைப்பெரியகோயிலில் முதல் ராசராசன் படிவத்தையும் அவரது முதற் பெருந்தேவி யாகிய ஒலோகமாதேவியாரின் படிவத்தையும் இராசராச சோழனது 29 ஆம் ஆட்சியாண்டில் எழுந்தருளுவித்தார்.

17. One ornament of seven strings. 18. One ornament of three strings. 19. S. I. I., Vol. II, No. 35. 20. ஞானசம்பந்தம், மலர் 15 இதழ் 12 - மலர் 16 இதழ் 1 பொய்கைநாடு கிழவன் என்ற கட்டுரையிற் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/71&oldid=980741" இலிருந்து மீள்விக்கப்பட்டது