65
ஒலோகமாதேவியார் பிரதிமம் இருபத்திரண்டு விரலே இரண்டு தோரை[1] உயரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவிக்கப்பெற்றது;[2] இவர் எழுந்தருளிநின்ற பத்மம் ஐவிரல் உயரமுடையது. இதனோடு கூடச்செய்த பீடம் ஒன்பதிற்றுவிரல் சமசதுரத்து ஐவிரலே இரண்டு தோரை உயரமுடையது. இவர்க்குப் பொய்கை நாடு கிழவன் கொடுத்தன:—
திருக்குதம்பை ஒன்று பொன் ஏழு மஞ்சாடியும் குன்றியாக இரண்டினால் பொன் முக்கால் கழஞ்சு; திருக்கைக் காறை ஒன்று பொன் கழஞ்சே இரண்டு மஞ்சாடியும் மூன்றுமா; திருகைக்காறை ஒன்று பொன் கழஞ்சே எட்டுமா.
6. பிறவாறு நினைவு கூர்ந்தமை
செங்கற்பட்டு ஜில்லாவில் இப்பொழுது மணிமங்கலம் என்ற பெயருடைய சிற்றூர் முற்காலத்தில் சிறந்த நகரமாக விளங்கியது. அதற்கு இராசராசன் காலத்தில் லோகமாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்று பெயர் வழங்கியதாகச் சில கல் வெட்டுக்கள் கூறுகின்றன.[3]
சோழபாண்டியன் [4] ஜடாவர்மன் சுந்தரபாண்டியனது 13ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று திருநெல்வேலி ஜில்லா மன்னார்கோவிலில் உள்ளது. மன்னார்கோவிலில் பல சேரிகள் [5] இருந்தன. அவற்றுள் ஒன்று லோகமா