10. இரு வில்லிகள்
வில்லி
வில்லை உடையவன் வில்லி. வில்லி என்பது இலக்கியச் சொல். இராமகாதையில், இந்திரசித்து போர்க்களத்தில் மடிந்த பிறகு இராவணனுக்கு அவன் தாயைப் பெற்ற பாட்டகிைய மாலியவான் உபதேசிக்கும்போது, விதிவிளைத் தது; அவ் வில்லியர் வெல்க! நீர் வெல்க!” என்கிருன். 'வில்லியர்' என்ற சொல்லுக்கு வில்லை உடையவர் அல்லது விற்போர் வீரர் என்று அங்கே பொருள் கொள்கிருேம்.
ஒரு வில்லி
அவன் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக் கும் முகத்தினன், ஓவிய உருவன்; நம்பியைக் கா ன நங்கைக்கு ஆயிர நயனம் வேண்டும் என யாவரும் போற்றும் எழிலன்; வனந்தனைய திருமேனி வள்ளல்;
தோள் கண்டார் தோளே கண்டார்
தொடுகழற் கமலம் அன்ன -- தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கைகண்ை டாரும் அஃதே! வாள்கொண்ட கண்ணுர் யாரே
வடிவினே முடியக் கண்டார்?”
என்ற வண்ணம் கண்டாரைப் பிணிக்கும் கட்டழகன், கார் முகில் வண்ணன்; அல்லையாண்டமைந்த மேனி அழகன்;
'கற்றையம் சடையவன் கண்ணில் காய்தலால்
இற்றவன், அன்றுதொட் டின்று காறும்தன், நற்றவம் இயற்றி, அவ் அனங்கள் நல்உருப் பெற்றனன்’’