என்ன முப்புரங்கள் செற்ற சேவலோன் துணைவனை செங்கை யோன் தங்கை (சூர்ப்பணகை) கூறிய சுந்தரன்.
அவன் சுந்தரன் மட்டுமல்லன்; அந்தரத்தவரும் அதிச யிக்கும் வில்லாற்றல் கொண்டவன். தாடகை விளிந்து உருள வில் கோலியவன்; மிதிலை புக்க நாள் திரியம்பகம் எனும் வில் இறுத்து அருளியவன்; கரன் முதல் கருணையற் றவர், கடற்படையொடும் சிரம் உகச் சில குனித்து அருளி யவன்; முக்கோடி வானளும் முயன்றுடைய பெருந்தவமும் கொண்ட இராவணனை வதம் செய்த ஏந்தல். அச் சுந்தரன். வில்லி-விசுவாமித்திரனின் வேள்வியை, அரக்கரை அழித்துக் காத்தபோது தேவர்களும் வாழ்த்திய சிறப்பைக் கம்பன் பின் வருமாறு கூறுகிருன்:
'பந்தரைக் கிழித்தன, பரந்த பூமழை
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன; இந்திரன் முதலிய அமரர் ஈண்டினர், சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினர்.”
இந்திரன் முதலிய தேவர்கள் வாழ்த்திய சுந்தர வில்லி இராமனே அன்ருே? -
இன்னும் ஒரு வில்லி
இவன் விற்படி திரள்தோள் வீரன்; பூசல் விற்குமரன்; கோல்நிறக் குனி வில் செங்கைக் குமரன்; கொற்றவான் சிலேக்கை வீரன்; வாகை வெஞ்சிலைக்கை வீரன்.
இவன் செய்த வரிவில் ஆண்மையைக் கண்டு புலத்தி யன் மருமாகிைய கும்பகருணன், திரிபுரம் செற்ற தேவனும் இவனுமே செருவில் ஒரு வில்லாளர்’ என்று ஆயிரங்கால் எடுத்துரைத்தான்.