பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
76



ஆட்சியாண்டில், அதாவது 20-7-1248 அன்று வெட்டப் பெற்றது. அதில் தருமம் செய்தவன் பெயர் சுந்தரவில்லி’’ என்று காண்கிறது. அவன் முழுப் பெயர் பொன்னமராவதிக் கண்டன் சுந்தர வில்லியான நிஷாதராசன் என்பது.

கல்வெட்டில் உறங்கா வில்லி

உறங்கா வில்லி என்ற பெயர் உள்ள சாசனம் ரீவில்லி புத்துாரில் சூடிக் கொடுத்த நாச்சியார் கோயிலில் உள்ளது. அச்சாசனம், பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்கோன் விஷ்ணு சித்தன் கோதைக்கு நாம் வரக் காட்டின பிரணய பத்திரிகை” என்று ரீ ரங் கநாதரே ஆண் டாளுக்கு எழுதிய கடிதம் போல் உள்ளது. இச் சாசனத் தை வெட்டு வித்தவன் 'உறங்காவில்லிதாசன்” ஆன மகா பலி வாளுதராயர் என்னும் அரசியல் அலுவலாளராகிய பரம பாகவதர் ஆவார்.

இக்கல்வெட்டு (577 of 1926) தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள் என்னும் கல்வெட்டுத் தொகுதியின் முதற் பாகத்தில் 149-151 பக்கங்களில் காட்டப்பெற்றுள்ளது.

இக் கல்வெட்டில் காணப்படும் செய்தி: திருவரங்கத்தில் பெரிய கோயிலில் சேரனே வென் ருன் மண்டபத்தில் சுந்தர பாண்டியன் பந்தற்கீழ் அரிய ராயன் கட்டிலில் பூரீரங்கநாதர் வீற்றிருந்தருளினர். அவ்வமயம் கோதை விட்டிலிருந்து அர்ச் சகர், குடவர், தண்டெடுப்பார் முதலியவர்கள் வந்தார்கள். பூநீரங்கநாதர் அவர்களே எதிர்கொண்டழைப் பித்தார். அவர் கள் கோதை வரக் காட்டின சாசனம் (அனுப்புவித்த கடிதத் தை) வாசித்துக் காட்டச் செய்திகளே ரீரங்கநாதர் அறிந்து கொண்டருளினர். அக்கடிதத்தில் நீ) ங்கநாதர் பதிருை யிரம் தேவிமாரொடும் பெரிய மண்டபத்திலே விநோதித் திருப்பதாகத் தோழியர் கோதைக்குத் கூறினர்; கோதை புண்ணிற்பு புளி பெய்தாற்போலவும், வேலால் துன் னம் பெய் தாற்போலவும் மனம் வெந்து நிலை தளர்ந்தாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/83&oldid=980752" இலிருந்து மீள்விக்கப்பட்டது