பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2

னும் கதம்ப அரசனுடைய தாளகுண்டா கல்வெட்டு, 'பல்லவானாம்புரி' என்று இதைக் குறிக்கிறது.

காஞ்சிக் கடிகை

பல்லவர் கோநகரமாக விளங்கிய காஞ்சிபுரம் கல்வியில் சிறந்த மாநகரமாகத் திகழ்ந்து வந்தது. காஞ்சிபுரத்தில் இருந்த கல்வி நிலையம் கடிகா (Giatika கடிகை) எனப்பட்டது. கடிகை என்ற சொல் கடிகா என்ற வடசொல்லின் தற்பவமாகும். ‘கட்’ என்ற தாதுவினின்று தோன்றியது இச் சொல்; இத் தாது ‘ஆழ்ந்து வேலை செய்’, ‘சுறுசுறுப்பாக இரு’ என்ற பொருள்படும்; எனவே கடிகா என்பது ‘ஆழ்ந்து அறிவுபெற முயலும் இடம்’ என்று பொருள்படக்கூடும் என்று ஆய்வாளர் கூறுகிறார்கள். கீல்ஹார்ன் என்பார் கடிகா என்பதைக் கோஷ்டி என்ற சொல்லுடன் தொடர்புபடுத்திக், கடிகா என்பது தூய பிராம்மணர்களின் கூட்டத்தைக் குறிக்கும் என்பர்.

காஞ்சிக் கடிகையின் பழமை

ஏறத்தாழக் கி. பி. 345 முதல் 370 வரை மயூரசர்மன் என்ற கதம்பகுல அரசன் ஆண்டு வந்தான். இவன் விர மறையவன். இவன் ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த நாடுகளைக் கைப்பற்றி ஆண்டவன். இவனுடைய பிரபவுத்திரன் (கொட்பேரன்) காகுத்ஸவர்மன் எனப் பெறுவான். இவன் பல்லவரை அறவே வெறுத்தவன். இவனது கல்வெட்டு ஒன்று தாளகுண்டாவில் கிடைத்துள்ளது. தாளகுண்டா, மைசூர்ப் பகுதியில் சிமோகா ஜில்லாவில் சிகார்பூர் தாலுகாவில் உள்ள ஊராகும். இவ்வூர்க் கல்வெட்டில்,“ மயூர சன்மன் காஞ்சிக் கடிகையில் படித்தான்” என்று சொல்லியிருக்கிறது. ஏறத்தாழக் கி.பி. 360இல் இது நிகழ்ந்திருக்கலாம். எனவே 4-ஆம் நூற்றாண்டிலேயே வேற்றுநாடுகளினின்று காஞ்சிபுரத்துக்குப் பிறர் வந்து கல்வி கற்கக்கூடிய அளவு பழமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/9&oldid=980588" இலிருந்து மீள்விக்கப்பட்டது