இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஏழு (ஓசை) - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எட்டு - எட்டுத்திசை
திருமூலர் திருமந்திரத்தில்
எண்ணலங்காரம் பொருந்திய பாட்டொன்று திருமந்திரத்தின் முதற் பாடலாகத் திகழ்கின்றது. அப்பாடல் பின்வருமாறு :
“ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
எண் விளக்கம்
ஒன்று - இறைவன் ஒருவனே
இரண்டு - இறைவனும் அவனது இன்னருளாகிய சக்தியும்
மூன்று - அயன், அரி, அரன் என்னும் இம் மூன்றுள்ளும் நிற்கும் நிலை.
நான்கு - உலகாதிதன், உலககாரணன், உலகிற்கு அந்தர் யாமி (உயிராய் நிற்றல்), உலகரூபி.
ஐந்து - ஐம்பொறிகள்
ஆறு - ஆறு ஆதாரங்களாகவும்1 அவ்வாதாரங்கட்குரிய தேவதைகளாகவும்2 ஆறத்துவாக்களாகவும்3
ஏழு - ஏழாவதாகிய துவாத சாந்தத்தில்4 இருப்பவன்