1 ஆறு ஆதாரங்கள் 2 தேவதைகள் 3 ஆறு அத்துவாக்கள்
மூலாதாரம் கணபதி மந்திரம் சுவாதிட்டானம் பிரமன் பதம் மணிபூரகம் திருமால் வன்னம் அணுகதம் உருத்திரன் புவனம் விசுத்தி மகேசுவரன் தத்துவம் ஆஞ்ஞை சதாசிவன் கலை
4. துவாதசாந்தம் - பிரமரந்திரத்திற்கு மேலிருப்பது; அங்கு ஆயிரத்தெட்டிதழ்க் கமலம் உள்ளதாகத் தியானிக்கப் படுவது; பரமசிவத்தை அதிதேவகையாகப் பெற்று விளங் குவது.
5. அட்டமூர்த்தி - நிலன், நீர், தீ, இயமானன், காற்று, திங்கள், ஞாயிறு, ஆகாசம்.
தஞ்சை வாணன் கோவையில்
கோவைப் பிரபந்தங்களில் வெகுவாகப் பயிலப்படுவது தஞ்சைவாணன் கோவை என்னும் பிரபந்தமாகும். இதனே எழுதியவர் பொய்யாமொழிப் புலவர். இந்நூல் ஏறத்தாழ 750ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதெனக் கருதப்படுகிறது இந்நூலுள் 341 ஆவது செய்யுள், ஆற்றிடை முக்கோல் பக
வரை விதைல்’ என்ற துறையில் அமைந்துள்ளது. அது பின் வருமாறு:
- ஒருவெண் குடையிரு நீழல்முக் கோல்கொண்
டொழுக்கத்தின. அருவெங் களரியைந் தாறுசெல் வீரரு ணீரெழுபார் மருவெண் திசைபுகழ் வாணன்தென் மாறையென்
வஞ்சியன்னுள் பொருவெஞ் சுடரிலே வேலொரு காளை பின்
போயினளே.'