பதினோராம் திருமுறையில்
பதினோராம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி அருளிச்செய்த ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவையின் முதல் ஆசிரியப் பாடலுள்,
‘... ... ... புரிபுன் சடையோன் திருவருள் பெற்ற இருபிறப் பாளன் முத்தீ வேள்வி நான்மறை வளர ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன் ஏழிசை யாழை எண்டிசை அறியத்
துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்’என அமைத்துள்ள அடிகளில் இரண்டு முதல் எட்டு வரை எண்கள் பயின்றுள்ளன. எண் விரிவை இக்கட்டுரையில் ஆங்காங்குக் காணலாம்.
பரிபாடலில்
பரிபாடலில் மூன்ரும் பாடல் கடுவன் இளவெயினனுர் பாடியது. அதில்,
‘. . . . . . ஒன்றென இரண்டென மூன்றென நான்கென ஐந்தென ஆறென ஏழென எட்டெனத் தொண்டென
நால்வகை யூழியெண் நவிற்றும் சிறப்பினை!’எனத் திருமாலைப் புகழ்ந்த பகுதி எண்ணலங்காரம் அமைந்தது. இப்பகுதிக்குப் பரிமேலழகர் தரும் விளக்கத்தின் சுருக்கம் வருமாறு:—
ஒன்று - ஆகாயத்தின் பண்பாகிய ஓசை
இரண்டு - காற்றின் சிறப்புப் பண்பாகிய ஊறு