நான்கு - நீரின் சிறப்புப் பண்பாகிய சுவை
ஐந்து - நிலத்தின் சிறப்புப் பண்பாகிய நாற்றம்
ஆறு - ஞானேந்திரியங்கள் ஐந்தும் மனமும்
ஏழு - அகங்காரம்
எட்டு - மான் (ஆன்மா)
இப்பகுதியில் ஆறுதொகைப் பொருளதாய் வருவதென், றும், எஞ்சிய எண்கள் புரணப் பொருள என்றும் பரிமேலழகர் குறிக்கிறார். தொகைப் பொருளே உணர்த்தாமல், ஒன்றின்னையே சிறப்பாக உணர்த்துவதைப் பரிமேலழகர் புரணப் பொருள் எனக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
கல்லெழுத்தில்
மெய்க்கீர்த்திகளிலும் பிரசஸ்திகளிலும் எண் அலங்காரம் பொருந்திய பகுதிகள் பலப்பல. மாதிரிக்கு ஒன்று:–
கி. பி. 1216 முதல் கி. பி. 1238 வரை பாண்டிய அரசனாகத் திகழ்ந்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற அரசனது மெய்க்கீர்த்தி ஒன்றில் எண்ணலங்காரம் பொருந்திய வரிகள் காணப்படுகின்றன. அவ்வரிகள்,
“ஒருகுடை நீழல் இருநிலம் குளிர
மூவகைத் தமிழும் முறைமையில் விளங்க
நால்வகை வேதமும் நவின்றுடன் வளர
ஐவகை வேள்வியும் செய்வினை யியற்ற
அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ
எழுவகைப் பாடலும் இயலுடன் பரவ
எண்டிசை யளவும் சக்கரம் செல்ல”
என்பன. இவ்வரிகளில் உள்ள எண்களின் விளக்கம் பின்வருவாறு:–