தீண்டப்பெற்று மயங்கி வீழ்ந்தான். இருமுது குரவரும் தம் மூத்த புதல்வனின் உடலே மறைத்துவைத்துத் தடுமாற்றம் இலராகித் திருநாவுக்கரசரை அமுதுசெய வேண்டினர். இறைவன் திருவருளால் திருநசவுக்கரசர் அங்கு நடந்ததை அறிந்தார்; அராத் தீண்டிய மகன் உயிர் பெறப் பதிகம் பாடி குர்ை. அப்பதிகம் ஒன்றுகொலாம்’ என்று துவங்குவது. அப்பதிகத்தில் ஒன்று முதல் பத்து எண்கள் தொகைக் குறிப் பாகவும் எண்ணலங்காரம் பொருந்தவும் சொல்லப்பட்டு உள்ளன. (விரிவைத் தருமையாதீன வெளியீடாகிய நாலாந் திருமுறையில் காண்க).
எமுகடற்றிருக்கை
மாறனலங்காரம் என்றேர் அணியிலக்கணம் 16-ஆம் நூற்ருண்டின் இறுதியில் எழுதப்பட்டது. இதனை இயற்றிய வர் பரமபாகவதராகிய திருக்குருகைப் பெருமாள் கவிராயர். இந்நூலுக்குச் சிறந்த விருத்தியுரை உண்டு, அதனைச் செய் தவர் காரிரத்னகவிராயர். இம்மாறனலங்காரம். சொல் லணி இயலில், இறுதியில் எழுகூற்றிருக்கை என்று ஒரு அணி கூறப்பட்டுள்ளது. செய்யுளிலே ஒன்று என்னும் எண் முதற் கொண்டு ஏழு எண் வரயிலேயும் ஏற்றியும் இறக்கியும் பதின்ைகு தடவை எண் ண லங்காரம் பொருந்த எண்ணி முடிப்பது எழுகூற்றிருக்கை எனப்படும். அதாவது:
1: 1–2–1; 1–2–3–2–1; 1–2 3 4-3-2-1: 1–2 3–4–5–4–3–2 l; 1–2 3–4–5–6–5–4–3–2–1: 1-2-3-4-5-6-7-6-5 4-3-2-1 என்ற முறையில் வருவது.
இதனே இரதபந்தத்தில் அமைப்பதும் உண்டு. அவ்வாறு அமைக்கப்பட்ட முறையை மாறனலங்கார உரையிலும், சாமிநாத பண்டிதர் அவர்களால் அச்சிடப்பெற்ற அடங்கல்
முறைப் பதிப்பிலும் காணலாம்.
ஞானசம்பந்தர் வியாழக்குறிஞ்சிப் பண்ணில் திருஎழு கூற்றிருக்கையாக ஒரு பதிகத்தை அருளியுள்ளார்.