இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்ற பாடலோடு ‘எண்ணிடை யொன்றினர்’ மேவி லொன்றர் ‘மணந்திகழ் திசைகளெட்டும்’ என்ற ஞானசம் பந்தர் தேவாரங்களும் எண்ணலங்காரம்பொருந்தியவையே! இவற்றுள் ஒன்று ‘எண்ணிடை யொன்றினர்’ என்ற பாடலுள் ஒன்று முதல் பத்துவரை எண்கள் உள்ளன. மணந்திகழ் திசைகளெட்டும் என்பதில் எட்டு முதல் ஒன்றுவரை எண்கள் இறங்கு முகமாகக் கூறப்பட்டுள்ளன.
எண்கள் பயிலப்பட்டுள்ள இவ்வழகினை எண்ணலங்காரம் என்று அணியிலக்கண நூலாரோ அதன் உரையாசிரியர்களோ கூறியதாகத் தெரியவில்லை. ஆனால் சிவஞான சித்தியார்க்குச் சிற்றுரை யாத்த மாதவச் சிவஞானயோ கிகளே ‘ஒரு கோட்டன்’ என்ற திருப்பாடலுரையில் ‘இஃது எண்ணலங்காரம்’ என்று குறித்துள்ளார். எனவே இவ் வழக்குக்குப் பெயரிட்டவர் சிவஞானமுனிவர் என்றே கருதலாம்.