பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ը ஆரணிய காண்ட ஆய்வு

“அருமிளை உடுத்த அகழிசூழ் போகிக்

கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும் தையலும் கணவனும் தனித்துறு துயரம் ஐயம் இன்றி அறிந்தன போலப் பண்ணிர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கிக் கண்ணிர் கொண்டு காலுற நடுங்க” (13:183-188) வண்டு பண் இசைத்தல் = இரங்கல் ஒலி. கண்ணிர் = கண்நீர் = அழுகை நீர், கள் நீர் = தேனாகிய நீர்ப் பொருள் - மலர்களின் தேனைக் குறிக்கிறது. கால் உற நடுங்க = கால் = ஓர் உறுப்பு, காற்று, கால் நடுங்கினவாம் = காற்றால் மலர்கள் அசைந்து ஆடினவாம்.

இந்தப் பகுதிகளில் கண்ணகிக்காகவும் கோவலனுக் காகவும் வையை நீரிலும் அகழி நீரிலும் இரங்கல் குறிப்பு அமைக்கப் பட்டிருப்பதைப் போலவே, கோதாவரி ஆற்று நீரிலும் இராமர் முதலியோர்க்காக இரங்கல் குறிப்பு ஏற்பட்டதாகக் கம்பரால் புனையப்பட்டுள்ளது. இலக்கிய ஒப்பு நோக்கிற்காக இங்கே சிலம்பு இடம்பெற்றுக் கம்பரின் கற்பனைக்கு அரண் செய்கிறது.

கொங்கையும் தோளும்

கோதாவரிச் குழலில் தாமரையில் படுத்திருந்த இரண்டு சக்கர வாளப் பறவைகளைப் பார்த்த இராமன் உடனே

சீதையின் கொங்கைகளைப் பார்த்தான். இராமனின் தோள்களை நோக்கிய சீதை மணல் மேடுகளை நோக்கினாள்.

'நாளங்கொள் நளினப் பள்ளி

நயனங்கள் அமைய நேமி வாளங்கள் உறைவ கண்டு

மங்கைதன் கொங்கை நோக்கும்