பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 0 ஆரணிய காண்ட ஆய்வு

முறுவல் என்பதே வாய்விட்டுச் சிரிக்காமல் உதட்டளவில் சிரிப்பது. அதிலும் சிறிய அளவே இராமன் செய்தானாம். அன்றிணை அன்னம் இதற்குமேல் எப்படி நடக்க முடியும் என்ற எண்ணத்தால் இவ்வாறு செய்தான்.

யானையின் நடையையும் இராமனது நடையையும் அடிக்கடிச் சீதை ஒத்திட்டுப் பார்த்திருக்க மாட்டாள் போலும்! அதனால் அவள் சிரித்தது புதுமையாய்த் தோன்றி யிருக்கலாம்.

இவ்வாறு நடந்து சென்று, கோதாவரிச் சூழலில் பஞ்சவடி என்னும் இடத்தில் இலக்குவன் அமைத்த பூந்தழைக் குடிலில் போய் இன்பமுடன் தங்கினர்.

சூர்ப்பணகையின் வருகை

மூவரும் தங்கியிருக்கும் இடம் நோக்கி இராவணனின் தங்கையாகிய சூர்ப்பணகை வரலானாள்.

உடன் பிறந்தே கொல்லும்

உயிரோடு உடல் தோன்றும்போதே கூடவே தோன்றும் நோயைப் போன்றவளாகி, உடன் பிறந்த அண்ணன் இராவணன் வேரோடு அழிவதற்குக் காரணமாயிருந்த வளாம் சூர்ப்பணகை:

லேமா மணி கிருதர் வேந்தனை

மூல காசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள் மேலைநாள் உயிரொடும் பிறந்து தான்விளை காலம் ஒர்ந்து உடனுறை கூடிய கோயனாள்” (8)

நிருதர் வேந்தன் = இராவணன், நீல மாமணி நிறத்து அரக்கன்’ என்னும் ஞான சம்பந்தரின் தோவாரத்தொடர் (3:91:8), நீல மாமணி நிருதர் வேந்தன்” எனக் கம்பரின் பாடலில் அறியக் கிடைக்கிறது. .