பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் ) 105

ஏறு- காளை, அந்தரத்தான் சிவன். கோதை சேரன். ஆழியான் = அரசாழி செலுத்தும் சேரன்.

அழகிய புதிய ஆடவனை நோக்கின் பெண்டிர் சிலர் வியப்படைவதுண்டு என்பதைப் பெரியபுராணத்தில் சேக்கிழார் பாடியிருப்பதாலும் அறியலாம். திருவாரூர்க் கோயிலில் சுந்தரரைப் பார்த்த பரவை நாச்சியார் பின்வருமாறு எண்ணி வியந்தாராம்:

'முன்னே வந்து எதிர்தோன்றும் முருகனோ பெருகொளியால் தன்னேரில் மாரனோ

தார் மார்பின் விஞ்சையனோ மின்னேர் செஞ்சடை

அண்ணல் மெய்யறிவு பெற்றுடையவனோ என்னே என்மனம் திரித்த

இவன் யாரோ என கினைந்தார்” (290) சூர்ப்பனகையும் பரவை நாச்சியாரும் அழகிய புதிய ஆடவனைக் கண்டு வியந்தது பொதுத்தன்மை; ஆனால் இருவர் வியப்பிற்கும் வேறுபாடு உண்டன்றோ?

தவப் பயனோ!

சூர்ப்பணகையின் பெயரால், கம்பர் சுவையான கற்பனை நயங்களைக் கொட்டியுள்ளார்.

மன்மதனுக்கு உருவம் இல்லை-இராமனுக்கு உருவம் உண்டு.அதனால் இவன் மன்மதனாய் இருக்க முடியாது என்று முன்பு எண்ணினாள் அல்லவா? பின்னர் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள் அவள்.

சிவனால் உருவம் இழந்த மன்மதன், அன்று தொட்டு

இன்றுவரை அருந்தவம் இயற்றி மீண்டும் இந்த வடிவம் கொண்டு வந்து விட்டானோ-என எண்ணிப் பார்க்கிறாள்: