பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1.விராதன் வதைப் படலம்

விராதன் என்னும் அரக்கனை இராமன் கொன்றதைப் பற்றிய படலம் இது.

சீதையோடு இராம இலக்குவர் அத்திரி முனிவர் உறை யும் பழு மரங்களை உடைய சோலைகள் சூழ்ந்துள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றனர். பாடல்

“முத்து இருத்திய திருத்திய மொய்ந் நகையோடும்
சித்திரக் குனி சிலைக் குமரர் சென்றணுகினர்
அத்திரிப் பெயர் அருந்தவர் இருந்த அமைதிப்
பத்திரப் பழுமரப் பொழில் துவன்றுபழுவம்”

(1)

மொய்ந்நகை = இது அன்மொழித் தொகையாக, அழகிய பற்களை யுடைய சீதையைக் குறிக்கிறது. முத்து களைத் திருத்தி வரிசையாக அமைத்து வைத்தாற் போன்றி ருக்கும் பற்களை உடையவளாம் சீதை.

ஈண்டு அருணகிரிநாதரின்

“முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை”

என்னும் திருப்புகழ்ப் பாடல் பகுதி ஒப்பு நோக்கத் தக்கது. அத்தி = தெய்வயானை. அத்திக்கு இறை = தெய்வ யானையின் கணவனாகிய முருகன். பத்தி = வரிசை. திருநகை = அழகிய பற்கள். முத்தைத் தரு பத்தித் திரு நகை = முத்துகளை வரிசையாகப் பதித்து வைத்தாற் போன்ற அழகிய பற்கள்.

திருப்புகழினும் தெளிவாகத் திருச்சிற்றம்பலக் கவிராயர்

வெண்தரளம் பற்களெனக் கோத்தமைத்த பந்தி