பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 0 ஆரணிய காண்ட ஆய்வு

மகளிர் - என்னும் கருத்து வெளிப்பாடு உலகியல்பை நன்கு எடுத்துக் காட்டுகிறது.

யானும் அருங்குல மகளே! ஆனால், நானே சொல்லாமல் தூது அனுப்ப யாரும் இல்லேன்' என்று திறமையுடன் பேசிப் பார்க்கிறாள்.

பலரும் சில சூழ்நிலைகளில் தங்கள்மேல் குறை சொல்லாமல், வேறொன்றின்மேல் குறையை ஏற்றிச் சொல்வார்கள். அதாவது, இரயில் தவறி விட்டது-தரை வழுக்கி விட்டது என்பது போலவாகும் இவர் காலம் கடந்து போனார் . இவர் விழிப்புடன் நடக்க வில்லை. ஆனால், இரயில் மேலும் தரைமேலும், குற்றம் சுமத்தப் படுகிறது. அது போல் உள்ளது அரக்கியின் பேச்சு. அதாவது, இவளாகக் காம விருப்பம் கொள்ள வில்லையாம், காமன் (மன்மதன்) வன் முறையில் இவளுக்குக் காம உணர்வு உண்டாகச் செய்கின்றானாம். அவனது வன் செயலிலிருந்து தன்னைக்காக்க வேண்டுகிறாள். அந்தப் பேர்வழி இப்படிச் செய்கிறான் என மட்டமாய்க் குறுப்பிடுவது போல், காமன் என்று ஒருவன்’ எனக் குறிப்பிட்டுள்ளாள். இது கம்பரது கைச் சரக்கு.

வாளா கழிந்தன

மேலும் அரக்கி மொழிகிறாள்: ஐயனே. நீ இங்கு இருப்ப தறியேன். முனிவர்கட்குப் பணிவிடை செய்து கொண்டு உள்ளேன். பழுதற்ற என் பெண்மையும் இளமையும் பயனிலாதுள்ளன. வாணாள் வீணானாய்க் கழிகிறது . என்றாள்.

“எழுதரு மேனியாய் ஈண்டு

எய்தியது அறிந்திலாதேன் முழுதுணர் முனிவர் ஏவல்

செய்தொழில் முறையின் முற்றிப்