பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ஆரணிய காண்ட ஆய்வு

இந்தக் காலத்தில் எந்தெந்த நாடுகளிலோ, ஆடவரோடு ஆடவரும், பெண்டிரோடு பெண்டிரும் காதலித்து மணந்து கொள்வதாகச் செய்தி அடிபடுகிறது. நம்மனோர்க்குக் காட்டுமிராண்டித் தனமாகத் தோன்றுகின்ற இந்த இழி செயல் போன்றதன்று கம்பன் கூறியிருப்பது. அழகின் மிகுதியை உயர்வு நவிற்சியாகப் புனைந்துரைத்துள்ள கற்பனையே இது.

ஒண்ட வந்த பிடாரி

சீதையைக் குறிப்பிட்டு இராமனிடம் அரக்கி கூறுகின்றாள். இவள் வஞ்சக அரக்கி; மாறு கோலத்தில் வந்துள்ளாள். ஊன் உண்ணும் வாழ்க்கையவள்; இவளைக் கண்டு யான் அஞ்சுகிறேன்; இவளை விலக்கி விடு என்றாள். இராமன் வேடிக்கையாகச் சிரித்தான். பின் அரக்கி சீதையை நோக்கி, அரக்கியே! எங்களுக்கு இடையே நீ ஏன் வந்தாய்? போய் விடு என்று மிரட்டினாள்: --

‘'நீ யிடை வந்தது என்னை கிருதர்தம்பாவை என்னாக் காயெரி யன்ைய கள்ள உள்ளத்தால் கதித்தலோடும்” (65) என்பது பாடல் பகுதி, ஒண்ட வந்ந பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்திற்றாம்' என்னும் பழமொழிக்கு எடுத்துக்காட்டு கிடைக்காதவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். -

அப்போது சீதை அரக்கியின் கூற்றுக்கு அஞ்சி இராமனின் தோள்களைத் தழுவிக் கொண்டாள். மீண்டும் அரக்கி தன் பெருமை கூற முயன்றாள். இராமன் அவளை நோக்கி, நீ இவ்விடம் விட்டுப் போய் விடுக; வெளியில் சென்றிருக்கும் என் தம்பி இலக்குவன் வரின் நடப்பதே வேறு என்று கூறிச் சீதையுடன் தவக்குடிலுக்குள் சென்று விட்டான்.