பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் . 129

“ஆசை அறுமின் ஆசை அறுமின்

ஈசனோ டாயினும் ஆசை அறுமின்' (26.15) “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (350) என முறையே திருமந்திரமும் திருக்குறளும் கூறுகின்றன. Necessity is the mother of invention (தேவையே கண்டு பிடிப்பின் தாய்) என்பதற்கு ஏற்ப ஆசை ஊக்க மருந்தாய்ப் பயன்பட வேண்டும். இராம காதையை ‘ஆசை பற்றி அறையலுற்றேன்’ எனக் கம்பர் கூறியது போல, ஆசை துண்டுகோலாய் - ஊக்க மருந்தாய் இருக்க வேண்டும். ஆசை மருந்தாக உருவகிக்கப்பட்டதால் இவ்வளவு கருத்துக்கும் இடம் உண்டாயிற்று.

ஓயாத ஆசை

அரக்கி காம வேதனையில் தாக்கப்பட்டு உயிர் செயல்பட முடியாதது போன்ற நிலை உண்டாகியும் ஆசையை விடவில்லையாம்.

'ஆவி ஒயினும் ஆசையின் ஓய்விலாள் (87)

நடந்த நிகழ்ச்சி ஒன்று செல்வத்தில் மிக்க பற்று கொண்ட பெரிய செல்வர் ஒருவர் அகவை முதிர்ந்து சாவோடு போராடிக் கொண்டிருந்தார். பல நாளாய் உணர்வு அற்றுப் படுக்கையில் கிடந்தார். காசு ஆசையால் அவருக்கு உயிர் போகவில்லை என உறவினர் பேசிக் கொண்டு, காசைக் கல்லில் இழைத்து அந்தச் சாந்தை எடுத்து அவரது நாக்கில் தடவினார்கள். ஆவி ஒய்வினும் ஆசை ஒயாததற்கு எடுத்துக்காட்டாய் இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது இங்கே.

அன்றிரவு கழிந்தது. அரக்கராம் இருளைப் போக்க இராமன் தோன்றியதுபோல் உலகின் புற இருளைப் போக்க ஞாயிறு தோன்றினான்.