பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் ( 147

'ஏற்ற நெடுங் கொடி மூக்கும் இருகாதும்

முலை இரண்டும் இழந்தும் வாழ ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ளப்

பரிசறிவான் அமைந்த தன்றோ காற்றினிலும் கனலினிலும் கடியானைக் கொடியானைக் கரனை உங்கள் கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன்

என்று சலம் கொண்டு போனாள்' (143)

'மிஞ்சினால் கெஞ்சுவது - கெஞ்சினகல் மிஞ்சுவது' என்ற முறையிலும், இச்சீ! இந்தப் பழம் புளிக்கும் என்ற முறையிலும், தன் எண்ணம் கை கூடாமல் வஞ்சினம் கொண்டு சூர்ப்பணகை சென்றாள்.