பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 13

தடை

அங்கே, விராதன் என்னும் கொடிய அரக்கன் மரங்கள் பெயரவும் மலைகள் பிளக்கவும் இடியேறு போல அதிர முழங்கிக் கொண்டு இராம இலக்குவர் எதிரில் வந்து அவர்கள் செல்லுவதைத் தடுக்கலானான்.

'சார வந்து அயல் விலங்கினன் மரங்கள் தரையில் பேர வன்கிரி பிளந்து உக வளர்ந்து இகல்பெறா வீர வெஞ்சிலையி னோர்எதிர் விராதன் எனுமக் கோர வெங்கண் உருமேறன கொடுக்தொழிலினான்' கோரமான கண்கள் உடையவனாம் விராதன். ஒருவரின் கண்களைக் கொண்டே அவர் இயல்பை உணர்ந்து கொள்ளலாம். 'அவன் முழிக்கிற முழியைப்பாரு' (முழி-விழி), திருடனை அரச விழி விழிக்கச் சொன்னால் அவன் எப்படி விழிப்பான்’ என்னும் பழமொழிகள் இதனை வலியுறுத்தும்.

உரும் ஏறு-பெரிய இடி, இடி போன்றவனாம். இடி தாக்கியவர் அழிவர் என்பது தெரியும். இவன் செயலும் அன்னதே.

இவன் நடந்துவரும் அதிர்ச்சியால் மரங்கள் விழுகின்றன. மலைகள் பிளந்து சிதறுகின்றன - எனில் மாந்தரின் நிலை என்ன? இராம இலக்குவர் இதுவரையும் போர் புரியாத கொடிய மற வில் உடையவர்கள். அவர்கட்கு வேலைதர வந்தான் விராதன்,

சீதையைப் பற்றல்

கோரப் பற்களும் குகைபோன்ற வாயும் உடைய விராதன் நில்லுங்கள்-நில்லுங்கள் என்று சொல்லிக் கொண்டே சீதையை ஒரு கையால் பற்றிக் கொண்டு வான் வழியே செல்லலானான்.