பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் ) 149

சூர்ப்பனகை கரன் முன்பு சென்று அழுது புரண்டு அங்கலாய்த்தாள். நடந்ததைக் கூறுமாறு கரன் வினவ, பின்வருமாறு அரக்கி கூறலானாள்:

தெளிவான அறிமுகம்

இரண்டே மானிடர், தவக் கோலத்தினர்; வில் வாள் ஏந்திய கையர்: மன்மதன் போன்ற அழகினர்; அறநெறி யினர் போல் காணப்படுகின்றனர். தயரதனின் மைந்தர் களாம். போர் புரிய எவரேனும் அரக்கர்கள் வரமாட்டார் களா என எதிர்பார்த்துத் தேடிக் கொண்டுள்ளனர்:

'இருவர் மானிடர், தாபதர், ஏந்திய

வரிவில் வாள்கையர், மன்மதன் மேனியர், தரும நீரர், தயரதன் காதலர், செருவில் நேரும் கிருதரைத் தேடுவார்’ (4) சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் அழகு பொருந்த அரக்கி கூறியதாகக் கம்பர் அழகாக இப்பாடலை அமைத்துள்ளார். சிறு சிறு தொடர்களுடன் பாடல் படிக்கச் சுவை பயக்கிறது.

இத்தகையோர் என் உறுப்புகளைக் குறைத்து நம் குலத்தையே குறைவு படுத்தினர் எனக் கூறினாள். உடனே சினம் மேலிட்டுக் கரன் கூறலானான்:

அரும்பழி

மானிடர் இவ்வாறு செய்தார்களா? அவர்களை நாம் கொன்று விடினும், இந்தப் பழிப்புக்கு உரிய மானக்கேடு உலகை விட்டு நீங்காதே.

"எழுந்து கின்று உலகேழும் எரிந்துகப்

பொழிந்த கோபக் கனலுகப் பொங்குவான் கழிந்து போயினர் மானுடர் என்னுங்கால் அழிந்ததோ இவ் அரும்பழி என்னுமால்' (9)