பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 0 ஆரணிய காண்ட ஆய்வு

விண்ணுலகத்தாரோ - மண்ணுலகத்தாரோ - எவர் என் மீது போருக்கு வரினும், வாழ்நாள் முடிந்து அழிவர். இதுபற்றி உனக்குச் (இலக்குவனுக்குச்) சொல்ல வேண்டிய தில்லையே.

ஆளியின் துப்பினாய் = சிங்கம் போன்ற வலிமையுடைய இலக்குமணா என் தோள்கள் போர் கிடைக்காமல் சோம்பலாயுள்ளன. அதைப் போக்க இந்தப் போரை என்னிடமே விடு. தோளின் தின வைத் தீர்ப்பதாகச் சொல்வது உலகியல்.

சோம்பித் திரியேல்' என்றார் ஒளவையார். சோம்பலால் உடல் கெடும்; உழைத்தாலே உடல் நலமாயிருக்கும். எனவே, சோம்பல் தோளைத் தின்னும் - அரிக்கும் என்றான். அவரை ஒரு துடை துடைத்துவிடு என்று உலகியலில் சொல்வதுபோல் துடைத்தி என்றான்.

மூங்கில் தீ

அரக்கி, இவன்தான் இராமன் எனக் கரனுக்குச் சுட்டிக் காட்டினாள். இங்கே அரக்கியின் செயலுக்குச் சுவையான ஒர் உவமை தந்துள்ளார் கம்பர்.

மூங்கில் காட்டிலே மூங்கிலோடு மூங்கில் இழைவதால் ஏற்படும் நெருப்பு, அந்த மூங்கில் காட்டையே முற்றும் அழித்து விடுவது போல, அரக்கியாகிய சூர்ப்பணகையின் செயலால் அரக்கர் குலமே அழிந்துவிடுமாம்:

"தோன்றிய தோன்றல் தன்னைச்

சுட்டினள் காட்டிச் சொன்னாள் வான்தொடர் மூங்கில் தந்த

வயங்கு வெந்தீ இது என்னத் தான்தொடர் குலத்தை யெல்லாம்

தொலைக்குமா சமைந்து கின்றாள் என்று வந்து எதிர்ந்த வீரன்

இவன் இகல் இராமன் என்றே” (66)