பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 ) ஆரணிய காண்ட ஆய்வு

தம் உடல் காணல்

கரன் படைத்தலைவர்கள் பதினால்வரும் இறந்தனர். பின்னர்த் திரிசிரன் படையுடன் வந்தான். இராமனால் படை மறவர்கள் பலரும் இறந்தனர். சிலர் தலை வெட்டுண்ண - உயிர் மேலே போகத் தேவராக மாறினர். இவர்கள் கீழே தலை வெட்டுண்ட தம் உடல்கள் நடனமாடிக் கொண்டிருப்பதைத் தம் மனைவிமாரொடு கண்டனராம்:

"சண்ட வெம் கடுங்கணை தடியத் தாம் சில

திண் திறல் வளை எயிற்று அரக்கர் தேவராய் வண்டுழல் புரிகுழல் மடங்தை மாரொடும் கண்டனர் தம் உடல் கவந்த நாடகம்” (121)

கண்ட = வலிய, தடிய குறைக்க, கவந்தம் - தலை அற்ற உடல் (முண்டம்).

மனைவிமாரொடும் கண்டனர் என்பதால், மறவர்கள் இறந்ததும் மனைவிமார்களும் உடனே தீக்குளித்தோ வேறு எப்படியோ இறந்து விண்ணில்போய்த் தம் கணவருடன் சேர்ந்து கொண்டன்ர் எனக் கற்பனை செய்து கொள்ளல் வேண்டும்.

தம் உடல் 5-67 ஆடுவதைத் தாமே கண்டனர் என்பது, திரைப்படமும் தொலைக் காட்சியும் வந்துவிட்ட இந்தக் காலத்தில் எளிதில் இயலக் கூடியதே. ஆனால், அந்தக் காலத்தில், அரக்கர் தேவராக மாறிக் கண்டதாகக் கூறியுள்ள கற்பனை நயம் மிகவும் சுவைத்தற்கு உரியது.

பேயும் நாயும்

இறந்தவர் தேவராகி மனைவிமாரொடு சேர்ந்து, இறந்து போன தம் உடலின் ஒரு தோளை பேய் ஒரு பக்க முனையையும், நாய் மற்றொரு பக்க முனையையும் பற்றிக்கொண்டு இழுப்பதைக் கண்டு நகைத்தனராம்: