பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் () 167

இன்னும் இராமலிங்க வள்ளலார் முதலியோரின் பாடல்களிலும் இந்தக் கருத்து இடம் பெற்றுள்ளது.

கெட்டது செய்தவர் குலத்தோடு - குடும்பத்தோடு அழிவர் என்னும் கருத்துடைய -

'கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம்

உண்பது உம் இன்றிக் கெடும்’ (166) "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும் (306) என்னும் குறள்களும் ஈண்டு எண்ணத்தக்கன. குளவியும் இராமனும்

ஆறு கால்களையும் சிறகுகளையும் உடைய குளவிகள் புழுக்களைக் கொட்டிக் கொட்டித் தம்மைப்போல் ஆக்குவது போல, இராமன் வஞ்சக அரக்கரைத் தன் அம்புகளால் கொன்று கொன்று தேவர்களாக மாற்றுகிறான்:

'அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தைத்

தஞ்செனத் தன்மய மாக்கும் தன்மைபோல் வஞ்சகத்து அரக்கரை வளைத்து வள்ளல்தான் செஞ்சரத் தூய்மையால் தேவராக்கினான்’ (125) சிறை = இறக்கை. அறுபதம் ஆறுகால். இங்கே இது சினையாகு பெயராக ஆறு கால்களையுடைய ஒரு வகைக் குளவியைக் குறிக்கிறது. கீடம் - புழு, அரக்கரைத் தேவராக மாற்றுவதால் அம்புக்குத் தூய்மை ஏற்றப்பட்டது. தாழ்ந்த அரக்கரை உயர்ந்த தேவராக மாற்றுவதால் இராமன் வள்ளல் என உயர்த்தப்பெற்றான்.

ஒருவர் மற்றொருவரையும் தன்னைப் போல் செயல் படும்படி மாற்றுவதற்கு, குளவி புழு பூச்சிகளைக் கொட்டிக் கொட்டித் தன்னைப்போல் ஆக்குவது போல’ என உவமை சொல்வது உலகியல். ஆனால் உண்மை வேறு. அதாவது:ஒரு வகை மண் கூட்டுக்குளவி (Mudpot wast) மண்ணால்