பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 ) ஆரணிய காண்ட ஆய்வு

ஆனால் அப்பொருள் விரைவில் அழிந்தொழியுமாம். அது போல் கரன் வீரர்கள் அழிந்தார்களாம்.

கரன் பின்னர் நேருக்கு நேர்நின்று பொருதான்; தான் கற்ற மாயப் போர் முறைகளையெல்லாம் கையாண்டான். இராமன் எல்லாவற்றையும் முறியடித்துக் கரனது தேரைத் துகள் படச் செய்தான்.

கரன் மேலெழுந்து பொருதான். இராமன் அம்பெய்திக் கரனது வலக்கையை முதலிலும் இடக்கையைப் பின்னும் வெட்டி வீழ்த்தினான். இறுதியாகக் கரனும் இறந்து பட்டான்.

உயிரும் உடலும்

பின்னர் இராமன், உயிராகிய தான் போர் புரிந்து கொண்டிருந்தபோது, உயிர் இல்லாத உடலாக இருந்த சீதைபால் சென்றான்:

'முனிவர் வந்துமுறைமுறை மொய்ப்புற இனிய சிங்தை இராமனும் ஏகினான் அணிக வெஞ்சமத்து ஆருயிர் யோகத்தான் தனியிருந்த உடலன்ன தையல்பால்’ (187) கண்ணிரால் கழுவுதல்

போரில் குருதிக் கறையும் தூசும் படிந்திருந்த இராமனது அடிகளை இலக்குவனும் சீதையும் தம் கண்ணிரால் கழுவினார்சள்:

'விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில் புண்ணின் ருேம் பொடிகளும் போய் உக அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும் கண்ணின் நீரினால் பாதம் கழுவினார்" (188) அன்னம் = சீதை. இந்தக் கண்ணிர் மகிழ்ச்சிக் கண்ணிராகும்.