பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்த்ர சண்முகனார் () 173

ஆசையின் விளைவு

போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த கரனது உடல்மேல் சூர்ப்பணகை விழுந்து தழுவி அழுதாள் என் ஆசையால் மூக்கு போனதல்லாமல், யான் உங்களிடம் முறையிட்ட வாக்கினால் உங்கள் வாழ்வையும் வாழ்நாளையும் போக்கினேன் கொடிய வளாகிய யான்:

'ஆக்கினேன் மனத்து ஆசை அவ்வாசை என்

மூக்கி னோடு முடிய முடிந்திலேன் வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும் போக்கினேன் கொடியேன் என்று போயினாள்' அரக்கர்கள் அனைவரும் அழியப் போவதற்குக் காரணமான சூர்ப்பண கை, சூறைக்காற்று போல் மிகவும் விரைவாக ஒடிச் செய்தியைக் கூற இலங்கையை அடைந்தாள்.