பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 ஆரணிய காண்ட ஆய்வு

எனக்குப் பழி உண்டாக்கியவரின் ஆளுமையும் அவர் உயிரும் இன்னும் உண்டு. என்னிடம் சிவன் வழங்கிய வாளும் வாழ்நாளும் இருபது தோள்களும் உள்ளன. நானும் இன்னும் உள்ளேன் அல்லவா?

'மூளும் உளதாய பழி என்வயின் முடித்தோர்

ஆளும் உளவாம் அவரது ஆருயிரும் உண்டாம் வாளும் உளது ஒதவிடம் உண்டவன் வழங்கும் நாளும் உளதோளும் உள நானும் உளன் அன்றோ?

r (60)

இவ்வாறு நொந்த இராவணன் தங்கையை நோக்கி, கரன் முதலானவர் ஒன்றும் செய்யவில்லையா என வினவ, அவர்கள் அனைவரும் இராமனால் இறந்து பட்டனர் என்றாள். (ஓத விடம் உண்டவன் = சிவன்)

நீரொடு நெருப்பு

கரன் முதலியோர் மாண்ட செய்தி கேட்ட இராவணனின் கண்களிலிருந்து, முகிலிலிருந்து மழை நீரோடு மின்னலாகிய கனலும் தோன்றுவது போல், நீரும் நெருப்பும் ஒரு சேரத் தோன்றின.

'காரிடை உருமின் மாரி

கனலொடு பிறக்குமாபோல் நீரொடு நெருப்புக் கான்ற

கிறைநெடுங் கண்களெல்லாம்” (65) பின்னர் அண்ணன் தங்கையை நோக்கி, நின்னை அவர்கள் இவ்வாறு செய்வதற்கு நீ என்ன தவறு செய்தாய் என வினவினான். இராமனுடன் வந்திருக்கும் பேரழகுடைய பெண் ஒருத்தி தொடர்பாக நான் ஒரு வகையில் செயல் பட்டதனால் இது நேர்ந்தது என்று கூறி, இராவணனுக்குக் காமநோய் மிகுமாறு சீதையின் பேரழகை விரிவாக விளக்கலானாள்.