பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 187

கம்பன் கொடுத்த கொடையாக இருக்குமோ? ஏன் - இயற்கையாகவும் எழுந்திருக்கலாம்.

இராவணன் எவ்வளவோ கற்றவன்; ஆனால் மெய்யறிவு (ஞானம்) இல்லாமையால் காமத்தை வெல்ல முடியவில்லை. அவனது நிலையைக் கூறுவதன் வாயிலாக, ஞானம் இலார் கற்றிருப்பினும் காமம் விடார் என்ற வேறொரு கருத்தை இங்கே அமைத்திருப்பது வேற்றுப் பொருள் வைப்பு அணி எனப்படும்.

சிறை

இராவணன் சீதையைச் சிறைப் படுத்தினான். எங்கே? தன் இதயம் என்னும் சிறைக்குள் -

"இதயமாம் சிறையில் வைத்தான்” (85) அவனது உள்ளம் வெயிலில் உருகும் வெண்ணெய் போல் நெகிழ்ந்தது:

"வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய்போல்

வெதும்பிற் றன்றே” (85)

மறைவு வெளிப்பாடு

இராவணனது காமநோய், கல்வியில் கருத்து

செலுத்தாத அறிவிலி மறைவாகச் செய்த தீமைபோல் வளரலாயிற்று:

“காமநோய், கல்வி கோக்கா

மதியிலி மறையச் செய்த தீமைபோல் வளர்ந்தது' (86) ஈண்டு கலித்தொகையில் உள்ள -

'கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார்

தங்காது தகைவின்றித் தாம்செய்யும் வினைகளுள் நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும்” (125 - 1,2,3)