பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 t ஆரணிய காண்ட ஆய்வு

சிச்சி (ச்சீ-ச்சீ) என்பது வெறுப்புடன் கூடிய இகழ்ச்சிக் குறிப்பு. சிலர் ச்சே - ச்சே என்பர். பல ஆண்டு கட்கு முன் யாழ்ப்பாணத்தார் ஒருவர், ஏதாவது மறுப்பு சொல்ல வேண்டுமெனில், ச்சீ - ச்சீ என்று அடிக்கடிச் சொல்வதைக் கேட்ட யான், இது அங்குள்ள பேச்சு வழக்கு

போலும் என எண்ணினேன்.

கொடிய செய்தியைக் கேட்கும்போது காதுகளைச் சிலர் பொத்திக் கொள்வது உலக இயல்பு. கொடிய செய்தியைக் கேட்காதே என்று அறிவுறுத்தும் முறையில் ஒரு குரங்கு இருகாதுகளையும் இரு கைகளால் பொத்திக் கொண்டிருக்கும் ஒவியத்தைப் பார்த்திருக்கலாம்.

தெரிவித்தல் என்பதை அறிவிக்க, சொல்லுதல், கூறுதல், மொழிதல், பகர்தல், இயம்பல் உரைத்தல், பறைதல், தெரிவித்தல், அறிவித்தல் முதலிய பல சொற்கள் இருக்க, இங்கே கம்பர், அறைதல் - அறை என்னும் வேர்ச்சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைக் கூர்ந்து நோக்க வேண்டும். அறைதல், என்பதற்கு, பறை யறைதல் - கன்னத்தில் அறைதல் என்றாற் போல, அடித்தல் என்னும் பொருளும் உண்டு. இங்கே மாரீசன் அறைகின்றான் என்பதற்கு, கன்னத்தில் அறைவது போல் கடுமையாய்க் கண்டித்துச் சொல்கிறான் எனப் பொருள் கொள்ளலாம் அல்லவா ?

தெருமரல் என்றால் அஞ்சுதல் - கலங்குதல், இங்கே தெருமந்த மாரீசன், இராவணன்போல் முன்பிருந்த அச்சத்தை விட்டு விட்டான் - இராவணனின் மீது எப்போதுமே சினங்கொள்ள முடியாதவன் இப்போது சினம் கொண்டான் என்னும் கருத்துகள் எண்ணத் தக்கன.

மாரீசன் கூறுகிறான். இராவணா! நீ உன்னை அழித்துக் கொள்ள முயல்கிறாய். உனக்குப் பிடிக்கவில்லை