பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 ஆரணிய காண்ட ஆய்வு

"இந்திரன் ஒப்பார் எத்தனை யோர்தாம் இழிபு உற்றார் செந்திரு ஒப்பார் எத்தனையோர்கின் திரு உண்பார்” (182) 'இந்திரன் கெட்டதும் பெண்ணாலே - சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என மக்கள் பாடுவதும், தின்னு ருசி கண்டவரும் பெண்ணு ருசி கண்டவரும் சும்மா இருக்கமாட்டார்கள்’ என்னும் பழமொழியும் ஈண்டு எண்ணத்தக்கன. பெண்ணாசையால் கெட்டவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

அந்தப் புரத்தை ஆரணங்குகள் பலர் அணி செய்து கொண்டிருந்தும் இராவணனுக்கு வயிறு நிரம்பவில்லை. தீராத காமப்பசி.

இவ்வாறு கரடு முரடாக - காரசாரமாக அறிவுரை கூறிய மாரீசனை இராவணன் கடிந்து சினந்து பேச, மீண்டும் கூறுகிறான் மாரீசன்:

என்னை இல்லை

தன்மேல் சினங்கொண்ட இராவணன் மீண்டும் சினங் கொள்வான் என்பதற்கு அஞ்சாமல் இராவணா! நீ என்னை முனிந்து பேசவில்லை - உன்னையே முனிந்து கொண்டாய்உன் குலத்தையும் முனிந்து கொண்டாய்:

'தன்னை முனிவுற்ற தறுகண் தகவிலோனைப்

பின்னை முனிவுற்றிடு மெனத் தவிர்தல் பேணாது உன்னை முனிவுற்று உன குலத்லை முனிவுற்றாய் என்னை முனிவுற்றிலை இது என்னென இசைத்தான்'

(191)

முனிவுறல் = சினத்தல். பின்னால் இராவணன் குலத்தோடு அழியப் போகிறான் ஆதலால், மாரீசன்