பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் ) 201

பொன் மானைக் கண்டு அதன் அழகில் மயங்கிய சீதை இராமனிடம் சொக்குப் பொடி' போட்டு அதைப் பிடித்துத் தரும்படி வேண்டினாள். இராமனும் ஏறக்குறைய ஒத்துக் கொண்டவனானான். அப்போது இலக்குவன், இது மாய மான் - பொய் மான் - இதை நம்பக் கூடாது என்று தடுத்தான். பயனில்லை. தையல் சொல் கேளேல்" என்னும் ஒளவையின் அறிவுரை ஈண்டு எண்ணத்தக்கது.

இராமன் இலக்குவனை நோக்கி, இது பொய் மான் எனல் தகாது. உலகில் நாம் அறியாத பல்லாயிரங்கோடி வகை உயிரினங்கள் உண்டு. அவற்றுள் இதுவும் ஒன்றா யிருக்கலாம். (224)

சிலை மறை

மேலும் கூறுகிறான். வில்வேதம் வல்ல இலக்குவ! இந்த மானின் அழகைக்கண்டு விரும்பாதவர் யார்? ஊர்வன - பறப்பனவாகிய அஃறிணை உயிரிகள் எல்லாம், விளக்கைச் குழ்ந்த விட்டிலைப் போல, இந்த மானைச் சூழ்வதைக்

õfr6፴፬ §:

“வரிசிலை மறைவலோனே மான் இதன் வடிவை உற்ற

அரிவையர் மைந்தர் யாரே ஆதரம் கூர்கிலாதார் உருகிய மனத்த வாகி ஊர்வன பறப்ப யாவும் விரிசுடர் விளக்கம் கண்ட விட்டிலின் வீழ்வ

- காணாய்' (230) ஆதரம் = விருப்பம். விட்டில் = ஒருவகைப் பூச்சி. விளக்கம் கண்டவிட்டிலின் என்னும் உவமையில் ஒரு கருத்து தொக்கியுள்ளது. விளக்கில் பட்ட விட்டில் துன்புறுவதுபோல், இந்த மானை விரும்பியவரும் துன்புறுவர் என்பது அது.