பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 203

மறை என்றதும் உடனே சமசுகிருத நால் வேதம் நினைவுக்கு வந்துவிடக் கூடாது.

இந்த மாயமான் வேண்டா என்று இலக்குவன் என்ன சொல்லியும் கேளாமல் இராமன் அதனைப் பிடிக்கவே விரும்பினான். அங்ஙனமெனில் நான் பிடித்துத் தருவேன் என இலக்குவன் கூறினான்.

சீதையின் சீறல்

அப்போது சீதை, இராமனை நோக்கி, நாயகனே! நீயே பிடித்துத் தரவேண்டும்மெனக் குவளையிலிருந்து முத்தைச் சிந்தினாள்:

'ஆயிடை அன்னம் அன்னாள்

அமுது உகுத்தனைய செய்ய வாயிடை மழலை இன்சொல்

கிளியினின் குழறி மாழ்கி நாயக நீயே பற்றி

நல்கலை போலும் என்னாச் சேயரிக் குவளை முத்தம்

சிந்துபு சீறிப் போனாள்” (238) இராமனது உள்ளத்தைக் கவரும் வகையில் சீதையின் போக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னம் போன்றவளாம் - செய்ய வாயிலிருந்து அமிழ்தம் சொரிவதுபோல் சொல் பேசினாளாம் - மழலைச் சொல்லாம் - இன் சொல்லாம் - கிளிபோல் குழறிக் குழறிப் பேசினாளாம் - மாழ்கினாளாம் (வருந்தினாளாம்)

குவளையிலிருந்து முத்தம் சிந்தினாள் - கொஞ்சிக் கொஞ்சிப் பேசியதன்றி, குவளை போன்ற கண்களிலிருந்து முத்து போன்ற நீர்த் துளிகளைச் சிந்தினாளாம்.