பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 ) ஆரணிய காண்ட ஆய்வு

உருவேற்றும் (செபிக்கும்) மாலை உருமாலை. இது தாமரையில் உள்ள மணியால் ஆனது.

தவசியர் ஆமை வடிவில் உள்ள மணைப்பலகையில் அமர்ந்ததே தவமிருப்பர். ஆமை துன்பம் நேரும்போது நான்கு கால்களும் ஒரு தலையும் ஆகிய ஐந்து உறுப்புகளையும் முதுகு ஒட்டின் கீழே அடக்கிக் கொள்ளும்; அது போல் ஐம்பொறி புலன்களின் பிணிப்பையும் அகற்ற வேண்டும். இதனை,

'ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து’’ (126) என்னும் குறட்பாவாலும் அறியலாம் ஆமைபோல் ஐந்து பற்றையும் தவசியர் அகற்றவேண்டும் என்பதை நினைவு செய்யும் வகையில் ஆமைபோல் செய்யப்பட்ட மனை வைத்திருப்பர்.

தவசியர் புலித்தோலிலும் அமர்வது உண்டு. அப்புலித் தோலும் ஆமை வடிவினதாகக் கிழித்து அமைக்கப் பெற்றிருக்கும். ஆமைபோன்ற வடிவமைப்புள்ள மணையிலும் புலித் தோலிலும் அமர்ந்தால் போதுமா? உண்மையாகவே ஐம்புலப்பற்றை அகற்றவேண்டுமே. அமர்ந்தால் ஆமைப் பலகை நொறுங்கும் வண்ணம் பருத்துள்ள உடலமைப் புடைய தவசியரும் (?) உளர்.

தவசியர்க்குப் பூணுரல், கமண்டலம், முக்கோல், ஆமைப் பலகை ஆகியவை உரியன எனத் தொல்காப்பியம் - மரபியலில் கூறப்பட்டுள்ளது:

"நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயுங் காலை அந்தணர்க்கு உரிய (70)

என்பது தொல்காப்பிய நூற்பா.